விடுதலைப்புலிகள் மீதான தடை நீக்கம்: ஐரோப்பியன் யூனியன் அதிரடி முடிவு

  • IndiaGlitz, [Wednesday,July 26 2017]

பயங்கரவாத இயக்கங்கள் பட்டியலில் இருந்து விடுதலைப்புலிகள் அமைப்பை 11 ஆண்டுகளுக்கு பிறகு ஐரோப்பிய ஒன்றிய தலைமை நீதிமன்றம் நீக்கியுள்ளது. இதனால் ஐரோப்பிய யூனியனில் உள்ள 28 நாடுகளில் உள்ள விடுதலைப்புலிகள் பெயரில் உள்ள வங்கிக்கணக்கை இனி அவர்கள் பயன்படுத்தலாம்
கடந்த 2009ஆம் ஆண்டுக்கு பின்னர் விடுதலைப்புலிகள் இயக்கத்தின் பெயரில் எந்தவொரு பயங்கரவாத செயலும் நடக்காததால், தடை பட்டியலில் இருந்து நீக்கியதாக ஐரோப்பிய ஒன்றிய தலைமை நீதிமன்றம் தனது தீர்ப்பில் தெரிவித்துள்ளது.
ஏற்கனவே கடந்த 2014ஆம் ஆண்டே கீழமை நீதிமன்றத்தில் விடுதலைப்புலிகள் மீதான தடை நீக்கப்பட்டது. ஆனால் ஐரோப்பிய யூனியன் இந்த தீர்ப்புக்கு எதிராக மேல்முறையீடு செய்தது. தற்போது மேல்முறையீட்டில் தடை நீக்கம் என்ற உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த தீர்ப்பை பழ.நெடுமாறன், தொல்.திருமாவளவன் உள்ளிட்ட தமிழக அரசியல் தலைவர்கள் வரவேற்றுள்ளனர்.