பாரீஸ் 'ரெக்ஸ் சினிமாவில்' 'கபாலி' செய்த சாதனை
- IndiaGlitz, [Thursday,July 07 2016]
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த 'கபாலி' திரைப்படம் ஐரோப்பாவின் மிகப்பெரிய திரையரங்கான Rex Cinema திரையரங்கின் பெரிய ஸ்க்ரீனில் திரையிடப்படுகிறது என்றும், பாரீஸ் நகரில் உள்ள இந்த திரையரங்கில் 2800 பார்வையாளர்கள் ஒரே நேரத்தில் அமர்ந்து படம் பார்க்கலாம் என்றும், இந்த திரையரங்கில் திரையிடப்படும் முதல் இந்திய படம் 'கபாலி'தான் என்றும் ஏற்கனவே பார்த்தோம்.
இந்நிலையில் 'கபாலி' படத்தின் ரிலீஸ் தேதி இன்னும் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படாத நிலையில் இந்த திரையரங்கில் 'கபாலி' படத்திற்கான முதல் நாள் காட்சிகளின் டிக்கெட்டுக்கள் முற்றிலும் விற்று தீர்ந்துவிட்டதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. எனவே இந்த திரைப்படம் முதல் நாள் வசூலில் அனைத்து இந்திய திரைப்படங்களின் வசூல் சாதனை முறியடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஏற்கனவே இந்த திரையரங்க வளாகத்தில் எஸ்.எஸ்.ராஜமவுலியின் 'பாகுபலி', சல்மான்கானின் 'Prem Ratan Dhan Payo, மற்றும் ஷாருக்கானின் Veer Zara' ஆகிய திரைப்படங்கள் திரையிடப்பட்டிருந்தாலும் அவை பெரிய ஸ்க்ரீனில் திரையிடப்படவில்லை என்பதும் பெரிய ஸ்க்ரீனில் திரையிடப்படும் முதல் இந்திய திரைப்படம் சூப்பர் ஸ்டார் ரஜினியின் 'கபாலி' மட்டுமே என்பதும் குறிப்பிடத்தக்கது.