நிறைவாக ஒரு புன்னகை.. 'எதிர்நீச்சல்' ஃபேமிலி போட்டோ.. முக்கியமான 2 பேர் மட்டும் காணவில்லை..!

  • IndiaGlitz, [Sunday,June 02 2024]

சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ‘எதிர்நீச்சல்’ சீரியல் விரைவில் முடிவுக்கு வர உள்ளதை அடுத்து கடைசி நாள் படப்பிடிப்பில் ‘எதிர்நீச்சல்’ பேமிலி எடுத்த புகைப்படம் இணையத்தில் வைரலாகி வரும் நிலையில் அதில் முக்கிய இரண்டு கேரக்டர்கள் மட்டும் காணவில்லையே என ரசிகர்கள் கமெண்ட் பகுதியில் பதிவு செய்து வருகின்றனர்.

சன் டிவியில் கடந்த 2022 ஆம் ஆண்டு முதல் ஒளிபரப்பாகி வரும் ‘எதிர்நீச்சல்’ சீரியல் பார்வையாளர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது என்பதும் இதில் குணசேகரன் கேரக்டரில் நடித்த ஜி மாரிமுத்து திடீரென காலமானதை அடுத்து அந்த கேரக்டரில் வேல ராமமூர்த்தி நடித்தார் என்பதும் தெரிந்தது.

இந்த நிலையில் இந்த சீரியல் விரைவில் முடிவுக்கு வரவிருக்கும் நிலையில் சமீபத்தில் இந்த சீரியலின் கிளைமாக்ஸ் காட்சிகளின் படப்பிடிப்பு நடந்ததாக கூறப்பட்டது. திருச்செல்வம் இயக்கத்தில் உருவாகி வரும் இந்த சீரியலில் ஜனனி என்ற கேரக்டரில் மதுமிதா, ஈஸ்வரி கேரக்டரில் கனிகா, ரேணுகா கேரக்டரில் பிரியதர்ஷினி மற்றும் நந்தினி கேரக்டரில் ஹரிப்ரியா நடித்து வந்தனர் என்பதும் இந்த நான்கு பெண் கேரக்டர்கள் இந்த நிகழ்ச்சியின் தூண் போல இருந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் கடைசி நாள் படப்பிடிப்பின் போது எடுத்த ‘எதிர்நீச்சல்’ பேமிலி புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வரும் நிலையில் அதில் குணசேகரன் கேரக்டரில் நடித்த வேல ராமமூர்த்தி மற்றும் ஈஸ்வரி கேரக்டரில் நடித்த கனிகா ஆகியோர்களை காணவில்லை என்பது ரசிகர்களுக்கு அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.

ஆனால் அதே நேரத்தில் ஜனனி கேரக்டரில் நடித்த மதுமிதா தனது சமூக வலைத்தளத்தில் இயக்குனர் திருச்செல்வன் உடன் ஜனனி, ஈஸ்வரி, நந்தினி மற்றும் ரேணுகா ஆகிய நால்வரும் இருக்கும் புகைப்படத்தை பதிவு செய்துள்ளார். ‘நிறைவாக ஒரு புன்னகை’ என்ற கேப்ஷனுடன் வெளியாகியுள்ள இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

More News

காதலருடன் ப்ரியா பவானி சங்கர் சென்ற நகரம்.. இனி எனக்கு இரண்டாவது வீடு என அறிவிப்பு..!

தமிழ் திரை உலகில் பிஸியான நடிகைகளில் ஒருவரான பிரியா பவானி சங்கர் தனது காதலருடன் வெளிநாட்டு நகரம் ஒன்றுக்கு சென்றுள்ள நிலையில் அந்நகரத்தை தனது இரண்டாவது வீடு

விக்கி - நயன் போன அதே இடத்தில் வனிதா - ஜோவிகா.. வைரல் புகைப்படம்..!

சமீபத்தில் இயக்குனர் விக்னேஷ் சிவன் தனது மனைவி நயன்தாரா, குழந்தைகள் உயிர்  மற்றும் உலகுடன் சென்ற அதே இடத்தில் வனிதா விஜயகுமார் தான் எனது மகள் ஜோவிகாவுடன்

அடுத்தடுத்து 4 படங்களில் நடிக்கிறேன்.. சூப்பர் அப்டேட் கொடுத்த மாதம்பட்டி ரங்கராஜ்..!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் 'குக் வித் கோமாளி' நிகழ்ச்சியின் நடுவர்களில் ஒருவராக இருக்கும் மாதம்பட்டி ரங்கராஜ் நேற்று நடந்த 'இந்தியன் 2' இசை வெளியீட்டு விழாவில் கலந்து கொள்ள வந்தபோது

மகிழ் திருமேனிக்கும் ஆதிக் ரவிச்சந்திரனுக்கும் உள்ள ஒரே ஒரு வித்தியாசம்: அஜித் பெருமிதம்..!

அஜித் தற்போது மகிழ் திருமேனி இயக்கத்தில் உருவாகி வரும் 'விடாமுயற்சி' மற்றும் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் உருவாகி வரும் 'குட் பேட் அக்லி' ஆகிய இரண்டு படங்களில் நடித்து வருகிறார்.

அண்ணன் தம்பி இருவருக்கும் ஒரே நாளில் பிறந்த நாள்.. இரட்டிப்பு சந்தோஷம்: கமல்ஹாசன் ட்வீட்..!

தனது அண்ணன் மற்றும் தம்பி ஆகிய இருவருக்கும் இன்று ஒரே நாளில் பிறந்தநாள் வருவதை அடுத்து தனக்கு இரட்டிப்பு சந்தோஷம் ஏற்பட்டுள்ளதாக உலகநாயகன் கமல்ஹாசன் தனது எக்ஸ் பக்கத்தில் ட்வீட் செய்துள்ளார்.