close
Choose your channels

நிறைவாக ஒரு புன்னகை.. 'எதிர்நீச்சல்' ஃபேமிலி போட்டோ.. முக்கியமான 2 பேர் மட்டும் காணவில்லை..!

Sunday, June 2, 2024 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ‘எதிர்நீச்சல்’ சீரியல் விரைவில் முடிவுக்கு வர உள்ளதை அடுத்து கடைசி நாள் படப்பிடிப்பில் ‘எதிர்நீச்சல்’ பேமிலி எடுத்த புகைப்படம் இணையத்தில் வைரலாகி வரும் நிலையில் அதில் முக்கிய இரண்டு கேரக்டர்கள் மட்டும் காணவில்லையே என ரசிகர்கள் கமெண்ட் பகுதியில் பதிவு செய்து வருகின்றனர்.

சன் டிவியில் கடந்த 2022 ஆம் ஆண்டு முதல் ஒளிபரப்பாகி வரும் ‘எதிர்நீச்சல்’ சீரியல் பார்வையாளர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது என்பதும் இதில் குணசேகரன் கேரக்டரில் நடித்த ஜி மாரிமுத்து திடீரென காலமானதை அடுத்து அந்த கேரக்டரில் வேல ராமமூர்த்தி நடித்தார் என்பதும் தெரிந்தது.

இந்த நிலையில் இந்த சீரியல் விரைவில் முடிவுக்கு வரவிருக்கும் நிலையில் சமீபத்தில் இந்த சீரியலின் கிளைமாக்ஸ் காட்சிகளின் படப்பிடிப்பு நடந்ததாக கூறப்பட்டது. திருச்செல்வம் இயக்கத்தில் உருவாகி வரும் இந்த சீரியலில் ஜனனி என்ற கேரக்டரில் மதுமிதா, ஈஸ்வரி கேரக்டரில் கனிகா, ரேணுகா கேரக்டரில் பிரியதர்ஷினி மற்றும் நந்தினி கேரக்டரில் ஹரிப்ரியா நடித்து வந்தனர் என்பதும் இந்த நான்கு பெண் கேரக்டர்கள் இந்த நிகழ்ச்சியின் தூண் போல இருந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் கடைசி நாள் படப்பிடிப்பின் போது எடுத்த ‘எதிர்நீச்சல்’ பேமிலி புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வரும் நிலையில் அதில் குணசேகரன் கேரக்டரில் நடித்த வேல ராமமூர்த்தி மற்றும் ஈஸ்வரி கேரக்டரில் நடித்த கனிகா ஆகியோர்களை காணவில்லை என்பது ரசிகர்களுக்கு அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.

ஆனால் அதே நேரத்தில் ஜனனி கேரக்டரில் நடித்த மதுமிதா தனது சமூக வலைத்தளத்தில் இயக்குனர் திருச்செல்வன் உடன் ஜனனி, ஈஸ்வரி, நந்தினி மற்றும் ரேணுகா ஆகிய நால்வரும் இருக்கும் புகைப்படத்தை பதிவு செய்துள்ளார். ‘நிறைவாக ஒரு புன்னகை’ என்ற கேப்ஷனுடன் வெளியாகியுள்ள இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.