'எதிர்நீச்சல்' மதுமிதா சென்ற கார் விபத்து.. மதுபோதையில் ஆண் நண்பருடன் இருந்தாரா?

  • IndiaGlitz, [Tuesday,February 27 2024]

சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ’எதிர்நீச்சல்’ சீரியலில் ஜனனி என்ற கேரக்டரில் நடித்து வரும் மதுமிதா தனது ஆண் நண்பருடன் காரில் சென்று கொண்டிருந்தபோது அந்த கார் விபத்துக்கு உள்ளானதாகவும் இதையடுத்து அவரிடம் காவல்துறையினர் விசாரணை செய்ததாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

’எதிர்நீச்சல்’ மதுமிதா தனது ஆண் நண்பருடன் சோழிங்கநல்லூர் பகுதியில் காரில் சென்று கொண்டிருந்ததாகவும் இரண்டு பேரும் மது அருந்தியதாகவும் தெரிகிறது. இந்த நிலையில் ஒருவழி பாதையில் தவறான ரூட்டில் அவர்கள் வேகமாக காரை ஓட்டிச் சென்றபோது எதிரே பைக்கில் வந்த போலீஸ்காரர் ஒருவர் மீது இவர்களுடைய கார் மோதியது.

இதில் போலீஸ்காரர் படுகாயம் அடைந்த நிலையில் அவர் உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இது குறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று மதுமிதா மற்றும் அவரது ஆண் நண்பரை காவல் நிலையத்திற்கு அழைத்து வந்து விசாரணை செய்தனர். அப்போது ’தங்கள் மீது தவறில்லை என்றும் எதிரே வந்த போலீஸ்காரர் தான் வேகமாக வந்து தங்கள் காரின் மீது மோதி விட்டதாகவும் தெரிவித்தனர்.

மதுமிதாவின் ஆண் நண்பர் கேரளாவை சேர்ந்தவர் என்றும் சென்னையில் ஐடி துறையில் பணிபுரிந்து வருவதாகவும் விசாரணையில் தெரிவித்துள்ளது. இது குறித்து மதுமிதா விளக்கம் அளித்த போது ’அது ஒரு சின்ன விபத்து, என்னுடைய நண்பர் தான் விபத்து செய்து விட்டார், வேறு அதைப் பற்றி பேச எதுவும் இல்லை’ என்று கூறியுள்ளார்.

More News

'அம்மா அந்த படத்தை மட்டும் பார்க்காதீர்கள்': குஷ்புவை எச்சரித்த மகள்கள்..!

குஷ்புவின் இரண்டு மகள்கள் சமீபத்தில் 'அனிமல்' படத்தை பார்த்து 'அம்மா நீங்கள் அந்த படத்தை பார்க்காதீர்கள்' என்று சொன்னதாக குஷ்பு சமீபத்தில் அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.

பாரதிராஜா குடும்பத்தின் 3ஆம் தலைமுறை இயக்குனர்.. பள்ளியில் படிக்கும்போதே இயக்கிய படம்.!

இயக்குனர் சிகரம் பாரதிராஜா மற்றும் அவரது மகன் மனோஜ் பாரதிராஜா ஆகிய இருவரும் இயக்குனர்கள் என்ற நிலையில் தற்போது பாரதிராஜாவின் பேத்தி மதிவதனி என்பவர் தான் படிக்கும்

'தலைவர் 172' படத்தை தயாரிப்பது இவரா? இது நம்ம லிஸ்ட்லேயே இல்லையே..!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்க உள்ள 172வது படத்தை தயாரிக்கும் தயாரிப்பாளர் அதிகாரபூர்வமாக தன்னுடைய சமூக வலைதளத்தில் தெரிவித்த நிலையில் இது நம்ம லிஸ்டிலேயே இல்லையே

நேற்று வெளியான வீடியோ குறித்த லேட்டஸ்ட் செய்தி.. ஏமாற்றத்தில் சிம்பு ரசிகர்கள்..!

நேற்று சிம்பு தனது சமூக வலைத்தளத்தில் வெளியிட்ட வீடியோ மிகப்பெரிய அளவில் வைரல் ஆன நிலையில் இந்த வீடியோ அவர் நடிக்க இருக்கும் 'எஸ்டிஆர் 48' 'படத்தின் வீடியோ என்று அனைவராலும்

ஆடி காரில் வந்து ஆட்டோவில் வீடு திரும்பிய ஏஆர் ரஹ்மான்: காரணம் இதுதான்..!

சென்னை அண்ணா சாலையில் உள்ள தர்காவில் சிறப்பு பிரார்த்தனை செய்ய  ஆடி காரில் வந்த  ஏஆர் ரஹ்மான் வீட்டிற்கு திரும்பும் போது ஆட்டோவில் சென்றதாக தகவல் வெளியாகி உள்ளது.