அந்த விபத்தில் என்ன தான் நடந்தது? 'எதிர்நீச்சல்' மதுமிதா வெளியிட்ட வீடியோ..!
Send us your feedback to audioarticles@vaarta.com
சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ‘எதிர்நீச்சல்’ சீரியலில் நடித்து வரும் நடிகை மதுமிதாவின் கார், காவல்துறையை சேர்ந்த ஒருவரின் பைக்கின் மீது மோதியதாகவும் அந்த காவல்துறை அதிகாரிக்கு படுகாயம் ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாகவும் செய்திகள் வெளியான நிலையில் தற்போது இது குறித்து அவர் விளக்கம் அளித்துள்ளார். அவர் அந்த வீடியோவில் கூறியிருப்பதாவது:
நான் ஒரு வதந்தியை தெளிவுபடுத்தவே இந்த வீடியோவை வெளியிட்டு இருக்கிறேன். எல்லா நியூஸ் சேனல்களில் கடந்த 2 நாட்களாக என்னை பற்றிய ஒரு பொய்யான செய்தி பரவி வருகிறது. எல்லா நியூஸ் சேனல்களில், இணையதள செய்திகளில், யூடியூப் சேனல்களில் ஒரு பொய்யான செய்தி பரவி வருகிறது
நான் குடித்துவிட்டு கார் ஓட்டியதாகவும், ஒரு போலீஸ்காரர் மீது மோதியதாகவும், அந்த போலீஸ்காரர் தீவிரமான காயம் ஏற்பட்டதாகவும் செய்திகள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன, முதலில் அது உண்மை இல்லை என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்
நான் குடிக்கவில்லை, ஆனால் அதே நேரத்தில் விபத்து நடந்தது உண்மைதான், அது ஒரு சின்ன விபத்து தான், தற்போது காயமடைந்த போலீஸ்காரர் நன்றாக இருக்கிறார், நானும் நன்றாக தான் இருக்கிறேன். எனவே தயவு செய்து இந்த விபத்து குறித்து பொய்யான செய்திகள், பொய்யான வீடியோக்களை பதிவு செய்ய வேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறேன்’ என்று குறிப்பிட்டுள்ளார். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com