இன்னும் ஆரம்பிக்கவே இல்லை.. அதற்குள் 4 கேரக்டர்கள் மாற்றம்.. என்ன நடக்குது 'எதிர்நீச்சல் 2' சீரியலில்?
Send us your feedback to audioarticles@vaarta.com
‘எதிர்நீச்சல் 2’ சீரியல் விரைவில் சன் டிவியில் ஒளிபரப்பாக இருக்கும் நிலையில், இந்த சீரியலில் நான்கு கேரக்டர்களில் நடித்த நட்சத்திரங்கள் மாறி உள்ளதாக கூறப்படுகிறது. ‘எதிர்நீச்சல் 2’ சீரியல் ஆரம்பிக்கும் முன்பே நான்கு பேர் மாறி இருப்பது ரசிகர்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்தி உள்ளது.
திருச்செல்வம் இயக்கத்தில் உருவான ’எதிர்நீச்சல்’ சீரியல் கடந்த ஜூன் மாதம் நிறைவு பெற்ற நிலையில், இந்த சீரியலின் இரண்டாம் பாகம் விரைவில் வெளியாகும் என்ற அறிவிப்புடன் சமீபத்தில் டீசர் வீடியோ வெளியாகி இணையத்தில் வைரலானது.
கனிகா, பிரியதர்ஷினி, ஹரிப்பிரியா ஆகியோர் மீண்டும் சீரியலில் இணைந்துள்ள நிலையில், ஜனனி என்ற கேரக்டரில் நடித்த மதுமிதா மட்டும் இந்த சீரியலில் இருந்து விலகி உள்ளதாகவும், அவர் விஜய் டிவியில் ஒளிபரப்பாக இருக்கும் "அய்யனார் துணை" என்ற சீரியலில் கமிட்டாகி உள்ளதாகவும் கூறப்பட்டது.
இந்த நிலையில், தற்போது மதுமிதாவை தவிர மீண்டும் மேலும் மூன்று கேரக்டர்கள் மாற்றப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. குறிப்பாக ஆதிரை கேரக்டரில் நடித்த சத்யா, விஜய் டிவியில் "தனம்" என்ற சீரியலில் நாயகியாக கமிட் ஆகிவிட்டதால், அவர் ‘எதிர்நீச்சல் 2’ சீரியலில் இருந்து விலகி உள்ளதாக கூறப்படுகிறது.
ஏற்கனவே ஆதி குணசேகரன் கேரக்டரில் நடித்த ஜி மாரிமுத்து காலமாகிவிட்டதால், அவருக்கு பதில் வேல ராமமூர்த்தி நடித்தார். தற்போது அவரும் விலகி விட்டதாகவும், அவருக்கு பதில் வேறொருவர் நடிக்க இருப்பதாகவும் குறிப்பிடப்படுகிறது.
அதேபோல் ’எதிர்நீச்சல்’ சீரியலில் தாரா என்ற கேரக்டரில் நடித்த குழந்தை நட்சத்திரம் ஃபர்சானா விலகி விட்டதாகவும், அவருக்கு பதில் பிரஜானா நடிக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது.
‘எதிர்நீச்சல் 2’ சீரியல் தொடங்குவதற்கு முன்பே நான்கு கேரக்டர்களில் மாற்றம் செய்யப்பட்டிருப்பது ரசிகர்களுக்கு குழப்பத்தை ஏற்படுத்தினாலும், இயக்குனர் திருச்செல்வம் வழக்கம் போல் இந்த தொடரை விறுவிறுப்பாக தருவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments