இன்னும் ஆரம்பிக்கவே இல்லை.. அதற்குள் 4 கேரக்டர்கள் மாற்றம்.. என்ன நடக்குது 'எதிர்நீச்சல் 2' சீரியலில்?

  • IndiaGlitz, [Tuesday,December 17 2024]

‘எதிர்நீச்சல் 2’ சீரியல் விரைவில் சன் டிவியில் ஒளிபரப்பாக இருக்கும் நிலையில், இந்த சீரியலில் நான்கு கேரக்டர்களில் நடித்த நட்சத்திரங்கள் மாறி உள்ளதாக கூறப்படுகிறது. ‘எதிர்நீச்சல் 2’ சீரியல் ஆரம்பிக்கும் முன்பே நான்கு பேர் மாறி இருப்பது ரசிகர்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்தி உள்ளது.

திருச்செல்வம் இயக்கத்தில் உருவான ’எதிர்நீச்சல்’ சீரியல் கடந்த ஜூன் மாதம் நிறைவு பெற்ற நிலையில், இந்த சீரியலின் இரண்டாம் பாகம் விரைவில் வெளியாகும் என்ற அறிவிப்புடன் சமீபத்தில் டீசர் வீடியோ வெளியாகி இணையத்தில் வைரலானது.

கனிகா, பிரியதர்ஷினி, ஹரிப்பிரியா ஆகியோர் மீண்டும் சீரியலில் இணைந்துள்ள நிலையில், ஜனனி என்ற கேரக்டரில் நடித்த மதுமிதா மட்டும் இந்த சீரியலில் இருந்து விலகி உள்ளதாகவும், அவர் விஜய் டிவியில் ஒளிபரப்பாக இருக்கும் அய்யனார் துணை என்ற சீரியலில் கமிட்டாகி உள்ளதாகவும் கூறப்பட்டது.

இந்த நிலையில், தற்போது மதுமிதாவை தவிர மீண்டும் மேலும் மூன்று கேரக்டர்கள் மாற்றப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. குறிப்பாக ஆதிரை கேரக்டரில் நடித்த சத்யா, விஜய் டிவியில் தனம் என்ற சீரியலில் நாயகியாக கமிட் ஆகிவிட்டதால், அவர் ‘எதிர்நீச்சல் 2’ சீரியலில் இருந்து விலகி உள்ளதாக கூறப்படுகிறது.

ஏற்கனவே ஆதி குணசேகரன் கேரக்டரில் நடித்த ஜி மாரிமுத்து காலமாகிவிட்டதால், அவருக்கு பதில் வேல ராமமூர்த்தி நடித்தார். தற்போது அவரும் விலகி விட்டதாகவும், அவருக்கு பதில் வேறொருவர் நடிக்க இருப்பதாகவும் குறிப்பிடப்படுகிறது.

அதேபோல் ’எதிர்நீச்சல்’ சீரியலில் தாரா என்ற கேரக்டரில் நடித்த குழந்தை நட்சத்திரம் ஃபர்சானா விலகி விட்டதாகவும், அவருக்கு பதில் பிரஜானா நடிக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது.

‘எதிர்நீச்சல் 2’ சீரியல் தொடங்குவதற்கு முன்பே நான்கு கேரக்டர்களில் மாற்றம் செய்யப்பட்டிருப்பது ரசிகர்களுக்கு குழப்பத்தை ஏற்படுத்தினாலும், இயக்குனர் திருச்செல்வம் வழக்கம் போல் இந்த தொடரை விறுவிறுப்பாக தருவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

More News

'கோட்' படத்தை அடுத்து இன்னொரு படத்தில் AI மூலம் கேப்டன் விஜயகாந்த்.. இயக்குனர் தகவல்..!

சமீபத்தில் வெளியான விஜய் நடித்த 'கோட்' திரைப்படத்தில் கேப்டன் விஜயகாந்த் AI மூலம் சில நிமிடங்கள் தோன்றிய நிலையில், இன்னொரு திரைப்படத்திலும் AI மூலம் கேப்டன் விஜயகாந்த்

பாலிவுட் மாஸ் நடிகர் படத்திற்கு இசையமைக்கும் சந்தோஷ் நாராயணன்.. குவியும் வாழ்த்துக்கள்..!

பாலிவுட் திரையுலகின் மாஸ் நடிகர் நடிக்கும் படத்தில் இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் பணிபுரிய இருப்பதாக வெளிவந்திருக்கும் தகவல் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

ரஜினி பெயரை மாற்றியவர்.. கலைஞர் வீட்டு கருவாட்டு வாசம்: நடிகர் செந்தாமரை மகள் பேட்டி..!

பிரபல குணச்சித்திர நடிகர் செந்தாமரையின் மகள் ராஜலட்சுமி நமக்கு அளித்த பிரத்யேக பேட்டியில், பல சுவாரஸ்ய தகவல்களை பகிர்ந்துள்ளார்.

2ஆம் பாகம் ஆகிறது விஷாலின் சூப்பர்ஹிட் படம்.. மீண்டும் இணையும் வெற்றி கூட்டணி..!

விஷால் நடிப்பில் சூப்பர் ஹிட் ஆகி 100 கோடி ரூபாய் வசூல் செய்த படத்தின் இரண்டாம் பாகம் விரைவில் உருவாக இருப்பதாக செய்திகள் வெளியாகி உள்ளன.

சூரிக்கு ஜோடியாகும் 'பொன்னியின் செல்வன்' நடிகை.. டைட்டில் அறிவிப்பு..!

நடிகர் சூரி நடிக்கும் அடுத்த திரைப்படத்தில் ஜோடியாக, 'பொன்னியின் செல்வன்' திரைப்படத்தில் முக்கிய வேடத்தில் நடித்த நடிகை இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.