மிகப்பெரிய அவமானம்.. ஏண்டா நடிச்சோம்ன்னு இருக்கு: 'எதிர்நீச்சல்' சீரியல் குறித்து வேல ராமமூர்த்தி..!

  • IndiaGlitz, [Sunday,June 16 2024]

’எதிர்நீச்சல்’ சீரியலில் ஜி. மாரிமுத்து கொண்டிருந்த நிலையில் அவர் திடீரென காலமானதால் அவரது குணசேகரன் கேரக்டரில் வேல ராமமூர்த்தி நடித்த நிலையில் தற்போது அந்த சீரியல் முடிந்த பின்னர் இந்த சீரியலில் ஏண்டா நடிச்சோம்ன்னு இருக்கு என்று அவர் பேட்டி அளித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

சன் டிவியில் ஒளிபரப்பான ’எதிர்நீச்சல்’ சீரியல் சமீபத்தில் முடிவடைந்த நிலையில் இந்த சீரியல் முடிந்ததை நினைத்து சீரியல் குழுவினர் பெரும் கவலையுடன் உள்ளனர். இந்த சீரியல் குறித்து தங்களது மலரும் நினைவுகளை சமூக வலைதளங்களில் பதிவு செய்து வருகின்றனர்.

இந்த நிலையில் இந்த சீரியலில் குணசேகரன் என்ற முக்கிய கேரக்டரில் நடிகர் ஜி மாரிமுத்து நடித்த நிலையில் அவருக்கு அந்த கேரக்டர் கச்சிதமாக பொருந்தியது. ஆனால் அவர் திடீரென மாரடைப்பால் காலமான நிலையில் அவருக்கு பதிலாக குணசேகரன் கேரக்டரை வேல ராமமூர்த்தி ஏற்று நடித்தார். ஜி மாரிமுத்து அளவுக்கு இல்லை என்றாலும் அந்த கேரக்டரை ஓரளவுக்கு புரிந்து கொண்டு அவர் நடித்த நிலையில் தான் திடீரென இந்த சீரியல் முன்னறிவிப்பு இன்றி முடிக்கப்பட்டது.

இந்நிலையில் சமீபத்தில் ஊடகம் ஒன்றுக்கு பேட்டியளித்த வேல ராமமூர்த்தி ’எதிர்நீச்சல்’ சீரியலுக்கு ஒரு ரசிகர் பட்டாளமே இருந்தது, இந்த சீரியல் தொடங்கியது முதல் முடியும் வரை விறுவிறுப்புக்கு பஞ்சம் இல்லாமல் இருந்தது, இந்த சீரியல் அடக்குமுறைக்கு உட்படும் பெண்களுக்கு ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் இருக்கிறது.

ஆனால் அதே நேரத்தில் இந்த சீரியலில் ஏண்டா நடிச்சோம்ன்னு எனக்கு இருக்கிறது, மிகப்பெரிய அவமானமாகவே நான் இந்த சீரியலில் நடித்ததை கருதுகிறேன், கடைசிவரை என்னுடைய கேரக்டர் ரசிகர்களுக்கு பிடிக்கவே இல்லை’ என்று வேதனையுடன் தெரிவித்தார். அவரது இந்த பேட்டி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

 

More News

குழந்தைகளுடன் குழந்தையாய் மாறி விட்ட விக்கி.. உலக தந்தையர் தினத்தில் க்யூட் வீடியோ..!

இன்று உலகம் முழுவதும் உலக தந்தையர் தினம் கொண்டாடப்பட்டு வரும் நிலையில், பல திரையுலக பிரபலங்கள் தங்கள் தந்தையுடன் எடுத்த புகைப்படங்களை சமூக வலைதளங்களில் பதிவு செய்து

பிறந்து 20 நாள் தான்.. க்யூட் குழந்தையுடன் போட்டோஷூட் எடுத்த நடிகை ஸ்ரீதேவி அசோக்..!

சீரியல் நடிகை ஸ்ரீதேவி அசோக் அவர்களுக்கு கடந்த 20 நாட்களுக்கு முன் பெண் குழந்தை பிறந்த நிலையில் அந்த குழந்தையுடன் அவர் எடுத்துள்ள க்யூட் போட்டோஷூட்

கையில் கோப்பை.. நீச்சல் குளத்தில் பிகினி.. கிளாமரில் கலக்கும் பாடகி ஜொனிதா காந்தி..!

பிரபல பாடகி ஜொனிதா காந்தி நீச்சல் குளத்தில் கையில் கோப்பையுடன் இருக்கும் புகைப்படம் மற்றும் வீடியோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ள நிலையில் அந்தப் புகைப்படம் இணையத்தில் வைரல்

நான் வேறொருவரை திருமணம் செய்ய ஆசைப்பட்டேன்: அபிஷேக் புது மனைவி அதிர்ச்சி பேட்டி..!

பிரபல யூடியூபர்  மற்றும் பிக்பாஸ் போட்டியாளர் அபிஷேக் சமீபத்தில் சுவாதி என்பவரை திருமணம் செய்த நிலையில் அவருடைய புது மனைவி 'நான் வேறொருவரை திருமணம் செய்ய ஆசைப்பட்டேன்

விதார்த், வாணிபோஜனை கைது செய்ய வேண்டும்: காவல்துறையில் அளிக்கப்பட்ட திடீர் புகார்..!

நாடு முழுவதும் கலவரத்தை ஏற்படுத்தும் ஒரு கதையில் நடித்த விதார்த் மற்றும் வாணி போஜன் ஆகிய இருவரையும் கைது செய்ய வேண்டும் என்று காவல் துறையில் புகார் அளிக்கப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.