close
Choose your channels

'எதிர்நீச்சல்' மதுமிதா சொன்ன குட் நியூஸ்.. வைரல் வீடியோ.. குவியும் வாழ்த்துக்கள்..!

Tuesday, July 18, 2023 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ’எதிர்நீச்சல்’ சீரியலில் ஜனனி என்ற முக்கிய கேரக்டரில் நடித்துவரும் மதுமிதா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கூறிய குட் நியூசை அடுத்து ரசிகர்கள் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

சன் டிவியில் மிகவும் விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கும் சீரியல் ’எதிர்நீச்சல்’. கடந்த ஆண்டு தொடங்கிய இந்த சீரியல் மிகப்பெரிய அளவில் வரவேற்பை பெற்று வருகிறது என்பதும் டிஆர்பியில் நம்பர் ஒன் இடத்தில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

மதுமிதா, கனிகா, பிரியதர்ஷினி, ஹரிப்ரியா, ஜி மாரிமுத்து உள்பட பலர் நடிப்பில் உருவாகி வரும் இந்த தொடரை திருச்செல்வம் இயக்கி வருகிறார் என்பதும் இந்த தொடர் 450 எபிசோடுகள் தாண்டி விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் இந்த தொடரில் ஜனனி என்ற கேரக்டரில் நடித்து வரும் மதுமிதா புதிய கார் வாங்கியுள்ளதாக குட் நியூஸ் ரசிகர்களுக்கு தெரிவித்துள்ளார். மேலும் இது குறித்த வீடியோவையும் அவர் தனது இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு உள்ள நிலையில் எதிர்நீச்சல் சீரியலில் நடிக்கும் நடித்து வரும் கனிகா, ஹரிப்பிரியா, பிரியதர்ஷினி உள்ளிட்ட பலரும் வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளனர்.

மதுமிதா வாங்கிய கார் கியா நிறுவனத்தின் சோனட் கார் என்பதும், இந்த காரின் விலை ரூ.18 லட்சம் இருக்கும் எனவும் கூறப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment