close
Choose your channels

கடைசியா பிகினிக்கும் வந்தாச்சா? 'எதிர்நீச்சல்' நடிகையின் போட்டோஷூட்..!

Saturday, July 20, 2024 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சன் டிவியில் ஒளிபரப்பான ’எதிர்நீச்சல்’ சீரியலில் குடும்ப பாங்கான கேரக்டரில் நடித்த நடிகை அந்த சீரியல் முடிந்தவுடன் கிளாமர் புகைப்படங்களை பதிவு செய்து வந்த நிலையில் தற்போது பிகினி புகைப்படத்தையும் பதிவு செய்து ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளார்.

சன் டிவியில் ஒளிபரப்பான ’எதிர்நீச்சல்’ சீரியலில் குணசேகரன் என்ற கேரக்டருக்கு மனைவியாக ஈஸ்வரி என்ற கேரக்டரில் நடிகை கனிகா நடித்திருந்தார். அவருடைய கேரக்டர் சீரியலின் வெற்றிக்கு உறுதுணையாக இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

நடிகை கனிகா ஏற்கனவே அஜித் நடித்த ’வரலாறு’ சேரன் நடித்த ’ஆட்டோகிராப்’ உட்பட சில தமிழ் படங்களிலும் ஏராளமான மலையாள படங்களிலும் நடித்துள்ளார். சமீபத்தில் கூட விஜய் சேதுபதியின் ’யாதும் ஊரே யாவரும் கேளிர்’ மற்றும் வசந்த் ரவி நடித்த ’வெப்பன்’ ஆகிய படங்களில் நடித்திருந்தார்.

இந்த நிலையில் ’எதிர்நீச்சல்’ சீரியலுக்கு பிறகு அவருக்கு வேறு வாய்ப்புகள் கிடைக்காத நிலையில் கிளாமர் போட்டோஷூட் புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராமில் பதிவு செய்து வந்த நிலையில் தற்போது திடீரென பிகினி போட்டோஷூட் புகைப்படத்தை பதிவு செய்துள்ளார். இந்த பதிவுக்கு ‘கடைசியில் பிகினிக்கும் வந்துட்டீங்களா’ என்று ரசிகர்கள் கமெண்ட் பகுதியில் பதிவு செய்து வருகின்றனர்.

 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment