'கார்த்திகை தீபம்'சீரியல் வில்லிக்கு ஜோடியாகும் 'எதிர்நீச்சல்' நடிகர்?

  • IndiaGlitz, [Tuesday,August 06 2024]

ஜீ தமிழ் சேனலில் ஒளிபரப்பாகி வரும் ’கார்த்திகை தீபம் ’ என்ற தொடரில் சன் டிவியில் ஒளிபரப்பான ’எதிர்நீச்சல்’ தொடரில் நடித்த நடிகர் இணைய இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

கார்த்திக் ராஜ் மற்றும் ஆர்த்திகா நடித்து வரும் ’கார்த்திகை தீபம் ’என்ற சீரியல் 500 எபிசோடுகளுக்கும் மேலாக ஜீ தமிழ் சேனலில் ஒளிபரப்பாகி வருகிறது என்பதும் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் தொடங்கிய இந்த சீரியல் நல்ல ரேட்டிங்கில் உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் இந்த சீரியலில் ரம்யா என்பவர் வில்லியாக நடித்து வரும் நிலையில் அவருக்கு ஜோடியாக விமல் என்பவர் நடிக்க உள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளன. இவர் ’எதிர்நீச்சல்’ சீரியலில் ஆதிரை கணவர் கரிகாலன் என்ற கேரக்டரில் நடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

’கார்த்திகை தீபம் ’சீரியலில் ரம்யாவின் வில்லத்தனம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வரும் நிலையில் அவருக்கு பதிலடி கொடுக்கும் கேரக்டராக அவருக்கு ஜோடியாக விமல் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. கார்த்திகை தீபம் சீரியலில் விமல் நடிக்க இருப்பது குறித்து அறிவிப்பை விரைவில் ஜீ தமிழ் சேனல் வெளியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அது மட்டும் இன்றி சன் டிவியில் ஒளிபரப்பாக உள்ள ’சொக்கத்தங்கம்’ என்ற சீரியலிலும் விமல் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளதாகவும் கூறப்படுகிறது.

More News

திருமணத்திற்கு முன்பே வருங்கால மனைவிக்கு லிப் கிஸ்.. பிக்பாஸ் ஷாரிக் புகைப்படங்கள் வைரல்..!

பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட நடிகர் ஷாரிக் திருமணம் வரும் 8ஆம் தேதி நடைபெற இருப்பதாக கூறப்படும் நிலையில் திருமணத்திற்கு முன்பே நடந்த விழா ஒன்றில் தனது வருங்கால

கனத்த இதயத்துடன் விலகுகிறேன்.. கமல்ஹாசனின் நெகிழ்ச்சியான அறிவிப்பு..!

பிக் பாஸ் சீசன் 1 முதல் ஏழு சீசன் 7 வரை தொகுத்து வழங்கிய உலகநாயகன் கமல்ஹாசன் அடுத்த சீசனை தொகுத்து வழங்கவில்லை என அதிகாரப்பூர்வமாக தனது சமூக வலைத்தளத்தில்

செய்வினை, பில்லி, சூனியத்திலிருந்து தப்பிப்பது எப்படி? : நசீம் அம்மா

பிரபல மாந்திரீகர் புதுக்கோட்டை நசீம் அம்மா அவர்கள், ஆன்மீகக்ளிட்ஸ் சேனலில் பில்லி, சூனியம், ஏவல் போன்ற மாந்திரீக செயல்கள் குறித்து விரிவாக பேசியுள்ளார்.

'தங்கலான்' ஆடியோ லான்ச் மேடையில் திடீரென சண்டை போட்ட மாளவிகா - பார்வதி.. வைரல் வீடியோ..!

'தங்கலான்' படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று நடைபெற்ற நிலையில் இந்த மேடையில் திடீரென நடிகைகள் மாளவிகா மோகனன் மற்றும் பார்வதி

'ராயன்' வெற்றியை அடுத்து 'வேட்டையன்' களத்தில் இறங்கிய துஷாரா விஜயன்..!

தனுஷ் நடித்த 'ராயன்' திரைப்படத்தில் துஷாரா விஜயன் நடிப்பு மிகப்பெரிய அளவில் பாராட்டப்பட்ட நிலையில் அடுத்த கட்டமாக அவர் 'வேட்டையன்' படத்தில் டப்பிங் பணிக்காக களம் இறங்கி