close
Choose your channels

'கார்த்திகை தீபம்'சீரியல் வில்லிக்கு ஜோடியாகும் 'எதிர்நீச்சல்' நடிகர்?

Tuesday, August 6, 2024 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

ஜீ தமிழ் சேனலில் ஒளிபரப்பாகி வரும் ’கார்த்திகை தீபம் ’ என்ற தொடரில் சன் டிவியில் ஒளிபரப்பான ’எதிர்நீச்சல்’ தொடரில் நடித்த நடிகர் இணைய இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

கார்த்திக் ராஜ் மற்றும் ஆர்த்திகா நடித்து வரும் ’கார்த்திகை தீபம் ’என்ற சீரியல் 500 எபிசோடுகளுக்கும் மேலாக ஜீ தமிழ் சேனலில் ஒளிபரப்பாகி வருகிறது என்பதும் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் தொடங்கிய இந்த சீரியல் நல்ல ரேட்டிங்கில் உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் இந்த சீரியலில் ரம்யா என்பவர் வில்லியாக நடித்து வரும் நிலையில் அவருக்கு ஜோடியாக விமல் என்பவர் நடிக்க உள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளன. இவர் ’எதிர்நீச்சல்’ சீரியலில் ஆதிரை கணவர் கரிகாலன் என்ற கேரக்டரில் நடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

’கார்த்திகை தீபம் ’சீரியலில் ரம்யாவின் வில்லத்தனம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வரும் நிலையில் அவருக்கு பதிலடி கொடுக்கும் கேரக்டராக அவருக்கு ஜோடியாக விமல் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. கார்த்திகை தீபம் சீரியலில் விமல் நடிக்க இருப்பது குறித்து அறிவிப்பை விரைவில் ஜீ தமிழ் சேனல் வெளியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அது மட்டும் இன்றி சன் டிவியில் ஒளிபரப்பாக உள்ள ’சொக்கத்தங்கம்’ என்ற சீரியலிலும் விமல் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளதாகவும் கூறப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment