த்ரிஷாவுக்கு பீட்டா தரப்பில் இருந்தும் நெருக்கடியா?

  • IndiaGlitz, [Saturday,January 21 2017]

கடந்த சில நாட்களுக்கு முன்னர் த்ரிஷா பீட்டாவின் ஆதரவாளர் என்றும், அதன் உறுப்பினர் என்றும் கூறப்பட்டதால் ஜல்லிக்கட்டு போராட்டக்காரர்களிடம் இருந்து கடும் கண்டனங்கள் எழுந்தன. இந்நிலையில் தான் ஜல்லிக்கட்டுக்கு எந்தவிதத்திலும் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை என்றும் பீட்டாவுக்கு ஆதரவு தெரிவிக்கவில்லை என்றும் த்ரிஷா விளக்கம் அளித்தார். அதுமட்டுமின்றி சமூக வலைத்தளத்தில் இருந்தும் தற்காலிகமாக வெளியேறினார்.

மேலும் நேற்று நடைபெற்ற ஜல்லிக்கட்டுக்கு ஆதரவான தென்னிந்திய நடிகர் சங்கத்தின் போராட்டத்தில் அவர் கலந்து கொண்டு தனது ஆதரவை தெரிவித்தார். இந்நிலையில் தற்போது பீட்டா தரப்பில் இருந்து த்ரிஷாவுக்கு கண்டனம் எழுந்துள்ளது. ஒருபக்கம், நாய்களுக்கு ஏற்படும் கொடுமைகள் குறித்து பிரசாரம் செய்யும் த்ரிஷா இன்னொரு பக்கம் காளையை கொடுமை செய்யும் விளையாட்டை ஆதரிக்கின்றார். இது முரண்பாடாக உள்ளது என்று பீட்டா அமைப்பின் இயக்குநர் வி. மணிலால் கூறியுள்ளார்.

இருப்பினும் த்ரிஷா எங்களுடைய விளம்பரத் தூதர் கிடையாது என்று அவர் கூறியது த்ரிஷா மீது ஜல்லிக்கட்டு போராட்டக்காரர்களுக்கு இருந்த சந்தேகத்தை தீர்த்து வைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் ஜல்லிக்கட்டு குறித்த பிற தகவல்களை த்ரிஷா உள்பட பல பிரபலங்களுக்கு வழங்க இருப்பதாகவும், அதன் பின்னர் ஜல்லிக்கட்டை ஆதரிப்பதோ அல்லது எதிர்ப்பதோ அவர்களுடைய முடிவு என்றும் மணிலால் தெரிவித்துள்ளார்.

More News

இன்று மாலை முதல் ஜல்லிக்கட்டு அவசர சட்டம். ஜனாதிபதியை சந்தித்த பின் தம்பித்துரை பேட்டி

மாணவர்கள் மற்றும் இளைஞர்களின் எழுச்சி காரணமாக ஜல்லிக்கட்டு நடத்துவதற்கு தமிழக அரசு சார்பில் தயாரிக்கப்பட்ட அவசர சட்டத்திற்கு மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் ஒப்புதல் அளித்தார். இந்த அவசர சட்ட வரைவு மத்திய சட்ட அமைச்சகத்தின் ஒப்புதல் பெற்று ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியின் ஒப்புதலுக்காக நேற்றே அனுப்பி வைக்கப்பட்டத

மெரீனா போராட்டத்தில் சகாயம். இளைஞர்கள் உற்சாக வரவேற்பு

முன்னாள் குடியரசு தலைவர் மறைந்த அப்துல்கலாமுக்கு பின்னர் இளைஞர்கள் பெரிதும் மதிக்கும் ஒரு நபராக...

மெரீனா போராட்டத்தில் சகாயம். இளைஞர்கள் உற்சாக வரவேற்பு

முன்னாள் குடியரசு தலைவர் மறைந்த அப்துல்கலாமுக்கு பின்னர் இளைஞர்கள் பெரிதும் மதிக்கும் ஒரு நபராக கருதப்படுபவர் ஐ.ஏ.எஸ் அதிகாரி சகாயம். இவருடைய நேர்மை, துணிவு மாணவர்களை ஈர்த்தது...

உங்களை உலகமே பின்பற்ற போகிறது. இளைஞர்களுக்கு இசைஞானி வாழ்த்து

ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக சென்னை மெரீனா, மதுரை தமுக்கம் மைதானம், அலங்காநல்லூர், உள்பட தமிழகத்தின் பல பகுதிகளில் மாணவர்கள் போராடி வரும் நிலையில் இந்த போராட்டத்திற்கு திரையுலகினர் உள்பட பலர் ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.

ஜல்லிக்கட்டுக்கு சர்வதேச அங்கீகாரம் கொடுத்த விக்கீபிடியா

ஒவ்வொரு ஆண்டும் அலங்காநல்லூர் போன்ற ஒருசில இடங்களில் மட்டும் நடந்து கொண்டிருந்த ஜல்லிக்கட்டை, தடை செய்ய வேண்டும் என்று பீட்டா எடுத்த நடவடிக்கை காரணமாக இன்று உலகம் முழுவதும் ஜல்லிக்கட்டு என்றால் என்ன என்பதை தெரியவைத்துவிட்டது.