'வலிமை' படத்தில் அஜித் கேரக்டர் குறித்த தகவல்
Send us your feedback to audioarticles@vaarta.com
அஜித் நடித்துவரும் ‘வலிமை’ படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்பு பொருளாதார பிரச்சினை காரணமாக பின்வாங்கி வருவதாகவும் ஜீடிவி நிறுவனம் இந்த படத்தின் தயாரிப்பில் இருந்து திடீரென விலகி விட்டதாகவும் வதந்தி கிளம்பியது. ஆனால் வதந்திகளை மீறி இந்த படத்தின் படப்பிடிப்பு அமைதியாக நடைபெற்று வருவதாகவும் படப்பிடிப்பில் எந்தவித பிரச்சினையும் இல்லை என்றும் படக்குழுவினர்களிடமிருந்து தகவல்கள் வெளிவந்துள்ளது
இந்த நிலையில் ‘வலிமை’ திரைப்படத்தில் அஜித் ஒரு போலீஸ் அதிகாரி கேரக்டரில் நடித்து வருகிறார் என்பது ஏற்கனவே தெரிந்ததே. தற்போது அவருடைய கேரக்டரின் பெயர் குறித்த தகவல் வெளிவந்துள்ளது. இந்த படத்தில் ஈஸ்வரமூர்த்தி ஐபிஎஸ் என்ற கேரக்டரில் அஜீத் நடித்து வருவதாக கூறப்படுகிறடு. ’என்னை அறிந்தால்’ திரைப்படத்தில் அஜித் ஏற்கனவே சத்யதேவ் ஐபிஎஸ் என்ற வலிமையான கேரக்டரில் நடித்த நிலையில், தற்போது அதே போல் ஈஸ்வரமூர்த்தி ஐபிஎஸ், என்ற கேரக்டரிலும் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது
மேலும் இந்த படத்தின் வில்லனாக நடிக்க பிரசன்னா உள்பட ஒருசிலரிடம் பேச்சுவார்த்தை நடைபெற்ற நிலையில் தற்போது இந்த படத்தில் ஒரு நடிகை வில்லியாக நடிக்க வாய்ப்பு இருப்பதாகவும் இது குறித்த தகவல் விரைவில் வெளிவரும் என்றும் கூறப்படுகிறது
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout