உச்சகட்ட கவர்ச்சி களத்தில் இளம் நடிகைகள்: வைரல் புகைப்படங்கள்!

கடந்த சில வருடங்களுக்கு முன் வரை குழந்தை நட்சத்திரங்களாக நடித்தவர்கள் தற்போது கவர்ச்சி களத்தில் குதித்து நாயகியாக முயற்சி செய்து வருவது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

’என்னை அறிந்தால்’, ’விஸ்வாசம்’ உள்பட ஒருசில படங்களில் அஜித்குமாருக்கு மகளாக நடித்த அனிகா சுரேந்திரன் கடந்த சில மாதங்களாக உச்சக்கட்ட கவர்ச்சி போட்டோஷூட் புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்து வருகிறார் என்பதும், இந்த புகைப்படங்களுக்கு லைக்ஸ், கமெண்ட்ஸ் குவிந்து வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

அதேபோல் கமல்ஹாசன் நடித்த ‘பாபநாசம்’ உள்பட பல திரைப்படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்த எஸ்தர் அனில், தற்போது குமரியாக மாறியுள்ள நிலையில் அவரும் அனிகாவுக்கு போட்டியாக கவர்ச்சி களத்தில் குதித்துள்ளார். கவர்ச்சி போட்டோசூட் புகைப்படங்களை இன்ஸ்டாவில் பதிவு செய்தால் நாயகி வேடத்தில் நடிக்க வாய்ப்பு கிடைக்கும் என்ற எண்ணத்தில் அவர்கள் பதிவு செய்து வரும் கவர்ச்சி புகைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த போட்டோஷூட் புகைப்படங்களுக்கு பலனாக விரைவில் எஸ்தர் அனில் மற்றும் அனிகா சுரேந்திரன் திரையுலகில் நாயகியாக வலம் வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.