பிரபல நட்சத்திர ஜோடியின் வாரிசு நடிகை விவாகரத்தா? 12 ஆண்டு மணவாழ்க்கை முடிகிறது..!
- IndiaGlitz, [Wednesday,February 07 2024]
பிரபல நட்சத்திர ஜோடியின் வாரிசு நடிகை தனது கணவரை விவாகரத்து செய்யப் போவதாக தகவல் வெளியாகி உள்ள நிலையில் 12 ஆண்டு மணவாழ்க்கை முடிவுக்கு வருவதாக கூறப்படுகிறது
மணிரத்னம் இயக்கத்தில் உருவான ’ஆயுத எழுத்து’ என்ற தமிழ் படத்திலும் ஏராளமான ஹிந்தி படத்திலும் நடித்தவர் பிரபல பாலிவுட் நட்சத்திர ஜோடியான தர்மேந்திரா - ஹேமாமாலினியின் மகள் இஷா தியோல்.
இந்த நிலையில் இஷா தியோல் கடந்த 2012 ஆம் ஆண்டு பரத் என்பவரை திருமணம் செய்து கொண்ட நிலையில் இந்த ஜோடிக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். இந்த நிலையில் திருமணம் ஆகி 12 ஆண்டுகள் கழிந்த நிலையில் தற்போது இஷா தியோல் தனது கணவரை பிரிய இருப்பதாகவும் விவாகரத்து செய்ய போவதாகவும் செய்திகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதனை அடுத்து இந்த தம்பதிகளின் 12 ஆண்டு மணவாழ்க்கை முடிகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
இது குறித்து இஷா தியோல் கூறிய போது ‘எங்கள் வாழ்க்கையில் ஏற்பட்ட மாற்றத்தால் நாங்கள் பரஸ்பரம் இணக்கமாக பிரிந்து செல்ல முடிவு செய்து இருக்கிறோம். எங்கள் குழந்தைகளின் நலன்கள் பாதிக்க கூடாது என்பதில் நாங்கள் கவனமாக இருக்கிறோம். எங்கள் தனியுரிமை மதிக்கப்பட வேண்டும் என்று விரும்புகிறோம்’ என்று ஆங்கில உலகம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.