மதனிடம் இருந்து மதன் பெற்ற 'பாயும் புலி'
- IndiaGlitz, [Thursday,July 16 2015]
வேந்தர் மூவீஸ் மதன் தயாரித்த விஷாலின் 'பாயும் புலி' படத்தின் உரிமையை எஸ்கேப் ஆர்ட்டிஸ்ட் மதன் பெற்றுள்ளதாக தற்போது தகவல்கள் வெளிவந்துள்ளது.
வேந்தர் மூவிஸ் மதன், பெரும் பொருட்செலவில் தயாரித்து வந்த 'பாயும் புலி' படம், கடந்த சில நாட்களாக பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. இந்த படத்தின் 'சிலுக்கு மரமே' பாடல் வெளியான சிலமணி நேரங்களில் சூப்பர் ஹிட் ஆகியுள்ளதால் படத்தின் எதிர்பார்ப்பும் பலமடங்கு பெருகியுள்ளது. எனவே இந்த படத்தின் வியாபாரமும் பெரிய அளவில் இருக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஏற்கனவே விஷாலின் பூஜை, ஆம்பள ஆகிய இரண்டு படங்களும் நல்ல வசூல் செய்திருந்ததால், விநியோகிஸ்தர்கள், தியேட்டர் உரிமையாளர்கள் மத்தியிலும் விஷால் நம்பிக்கைக்குரிய நடிகராக தென்படுகிறார்.
இந்நிலையில் வேந்தர் மூவீஸ் மதன் அவர்களிடம் இருந்த படத்தின் வெளியீட்டு உரிமையை எஸ்கே ஆர்ட்டிஸ்ட் மதன் பெரும் தொகை கொடுத்து வாங்கியுள்ளதாக கூறப்படுகிறது. ஏற்கனவே சுசீந்திரன் இயக்கிய 'அழகர்சாமியின் குதிரை' படத்தை தயாரித்து வெளியிட்டவர் எஸ்கேப் ஆர்ட்டிஸ்ட் மதன் என்பது குறிப்பிடத்தக்கது.
விஷால், காஜல் அகர்வால், சமுத்திரக்கனி, சூரி, ஜெயப்பிரகாஷ், ஆனந்த்ராஜ், மற்றும் பலர் நடித்துள்ள இந்த படத்திற்கு டி.இமான் இசையமைத்துள்ளார். வேல்ராஜ் ஒளிப்பதிவு செய்துள்ள இந்த படத்தை அந்தோணி படத்தொகுப்பு செய்துள்ளார்.