'குணா' குகை அளவுக்கு ஃபேமஸ் ஆனது 'வெற்றி' தியேட்டர்: ஏன் தெரியுமா?
Send us your feedback to audioarticles@vaarta.com
உலகநாயகன் கமலஹாசன் நடித்த ’குணா’ திரைப்படம் வெளியான பின்னர் தான் கொடைக்கானலில் அப்படி ஒரு குகை இருக்கிறது என்பது பலருக்குத் தெரிய வந்தது. அடர்த்தியான கொடைக்கானல் மலையின் இடையே உள்ள ஒரு குகையை கண்டுபிடித்த கமல்ஹாசன் அந்த குகையில் தான் முக்கிய காட்சிகளை படமாக்கினார் என்பதும் இந்தப் படம் வெளியான பிறகு கொடைக்கானல் செல்லும் ஒவ்வொரு சுற்றுலா பயணிகளும் குணா குகைக்கு சென்று செல்பி எடுக்காமல் வருவதில்லை என்பது குறிப்பிடத்தக்கது. அந்த அளவிற்கு சுற்றுலா பயணிகளின் முக்கிய இடமாக கொடைக்கானலில் உள்ள குணா குகை மாறியுள்ளது
அந்தவகையில் தற்போது ’விக்ரம்’ படம் வெளியானவுடன் வெற்றி தியேட்டரும் கமல் ரசிகர்களின் சுற்றுலா பகுதியாக மாறினாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை என்று கூறப்படுகிறது. ’விக்ரம்’ திரைப்படத்தில் போலீசில் சிக்கி சிறையில் இருக்கும் தனது கூட்டாளிகளான நரேன் உள்ளிட்டவர்களை விடுதலை செய்வதற்காக கமல்ஹாசன் சிறைக்குள் அதிரடியாக நுழைந்து அவர்களை மீட்டு வருவார்.
சிறையில் இருந்து திரும்பும்போது வெளியே போலீசார் அவர்களை பிடிக்க காத்திருக்கும் நிலையில் சுரங்கப்பாதை வழியாக வெற்றி தியேட்டரில் வழியாக கமல் குழுவினர்கள் வெளியேறுவார்கள். இந்த காட்சியை வெற்றி தியேட்டரிலேயே லோகேஷ் கனகராஜ் படமாக்கி இருந்தார் என்பதும் இது குறித்து மிகவும் பெருமையாக வெற்றி தியேட்டர் உரிமையாளர் ரோகேஷ் கௌதம் தெரிவித்து இருந்தார் என்பதையும் பார்த்தோம்
இந்த நிலையில் தற்போது ’இது தான் விக்ரம் குழுவினர்கள் தப்பித்த இடம்’ என்று வெற்றி தியேட்டரில் பெயர்ப் பலகை வைக்கப்பட்டுள்ள நிலையில் அந்த இடத்தில் ’விக்ரம்’ படத்தை பார்க்க வரும் ரசிகர்கள் செல்பி எடுத்துக் கொண்டு செல்கின்றனர். ஒரே ஒரு காட்சியினால் வெற்றி தியேட்டர் கமல் ரசிகர்களின் சுற்றுலா பகுதி போல் மாறிவிட்டதே என நெட்டிசன்கள் ஆச்சரியம் அடைந்து வருகின்றனர்.
#Vikram escape tunnel??#Vikram count 3 @VettriTheatres
— Hariharan (@_hari_s_haran_) June 12, 2022
Speakers, bass lam summa alarudhu?????? pic.twitter.com/Sict8PDqZC
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments