சிவகார்த்திகேயன் தங்கை கேரக்டரில் யூடியூப் பிரபலம்?

  • IndiaGlitz, [Saturday,February 02 2019]

கடந்த ஆண்டு சிவகார்த்திகேயன் நடித்த 'சீமராஜா' மற்றும் நடித்து தயாரித்த 'கனா' ஆகிய இரண்டு திரைப்படங்கள் நல்ல வெற்றியை பெற்ற நிலையில் தற்போது அவர் ராஜேஷ் எம் இயக்கத்தில் ஒரு படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த படத்திற்கு 'மிஸ்டர் லோக்கல்' என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ளது.

இந்த படத்தில் 'வேலைக்காரன்' படத்திற்கு பின் மீண்டும் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா, சிவகார்த்திகேயனுடன் ஜோடி சேர்ந்துள்ளார். இந்த நிலையில் இந்த படத்தில் யூடியூபில் புகழ்பெற்ற எருமைச்சாணி ஹரிஜா முக்கிய கேரக்டரில் நடித்துள்ளதாகவும், அவர் சிவகார்த்திகேயனின் தங்கை கேரக்டரை ஏற்றுள்ளதாகவும் கூறப்படுகிறது. இதுகுறித்த அறிவிப்பு இன்று மாலை வெளிவரும் இந்த படத்தின் ஃபர்ஸ்ட்லுக்கில் இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

எருமைச்சாணி ஹரிஜா ஏற்கனவே அதர்வா நடித்து வரும் '100' மற்றும் 'ஓடவும் முடியாது ஒளியவும் முடியாது' போன்ற படங்களில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

சிவகார்த்திகேயன், நயன்தாரா, ராதிகா, யோகிபாபு, சதீஷ் உள்பட பலர் நடித்து வரும் இந்த படத்திற்கு ஹிப்ஹாப் தமிழா ஆதி இசையமைத்து வருகிறார். ஸ்டுடியோக்ரீன் தயாரிப்பில் உருவாகி வரும் இந்த பட்ம் வரும் கோடை விடுமுறையில் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.