எருமை சாணி விஜய் திருமணம்.. மணமகளுடன் இருக்கும் க்யூட் புகைப்படங்கள்..!

  • IndiaGlitz, [Wednesday,May 24 2023]

எருமை சாணி என்ற யூடியூப் சேனல் மூலம் பிரபலமான விஜய் தனது நீண்ட நாள் காதலியை திருமணம் செய்து கொண்ட நிலையில் இவர்களது திருமணம் இன்று நடந்துள்ளது. இது குறித்த புகைப்படங்கள் இன்ஸ்டாகிராமில் வைரலாகி வருகின்றன.

எருமை சாணி என்ற யூடியூப் சேனல் விதவிதமான வீடியோக்களை வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்து வருகிறது என்பதும் குறிப்பாக கொரோனா ஊரடங்கு நேரத்தில் இந்த சேனலில் பதிவான வீடியோக்கள் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

யூடியூப் மூலம் பிரபலமான விஜய், ஹிப்ஹாப் தமிழா ஆதி நடித்த ’மீசையை முறுக்கு’ ’நான் சிரித்தால்’ போன்ற திரைப்படங்களிலும் நடித்துள்ளார். அதுமட்டுமின்றி அருள்நிதி நடித்த ’டி பிளாக்’ என்ற படத்தை இயக்கிய இவர், அந்த படத்தில் அருள்நிதியின் நண்பராகவும் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் எருமை சாணி விஜய், நட்சத்திரா என்பவரை நீண்ட வருடங்களாக காதலித்து வந்த நிலையில் இவர்களது நிச்சயதார்த்தம் இருதரப்பு பெற்றோர் முன்னிலையில் சமீபத்தில் நடந்துள்ளது. இந்த நிலையில் இன்று இவர்களது திருமணம் நடந்த நிலையில் இதுகுறித்த புகைப்படங்களை விஜய் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இதையடுத்து ரசிகர்கள் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். விஜய்யின் மனைவியான நட்சத்திரா மாடல் மற்றும் பேஷன் டிசைனர் என்பது குறிப்பிடத்தக்கது.

More News

தீபிகாவும் இல்லை, கீர்த்தி சுரேஷூம் இல்லை.. 'STR 48' படத்தில் இவர்தான் நாயகி..!

சிம்பு நடிப்பில், தேசிங்கு பெரியசாமி இயக்கத்தில், உலகநாயகன் கமல்ஹாசன் தயாரிப்பில் உருவாக இருக்கும் 'STR 48' என்ற படத்தில் தீபிகா படுகோனே அல்லது கீர்த்தி சுரேஷ் நாயகியாக நடிப்பார்

இயக்குநர் கேமராவில் உள்ளாடையை காட்டச் சொன்னார்? மோசமான அனுபவத்தை பகிர்ந்த விஜய் பட நடிகை!

தமிழ் சினிமாவில் அறிமுகமாகி பின்னர் பாலிவுட், தற்போது ஹாலிவுட் என்று உலகப் பிரபலமாக மாறியிருக்கும் நடிகை பிரியங்கா சோப்ரா

'தளபதி 68': அறிவிப்பு வெளியான சில நாட்களில் பிரமாண்ட கட் அவுட்.. அதுவும் எந்த நாட்டில் தெரியுமா?

தளபதி விஜய் நடிக்க இருக்கும் 'தளபதி 68' திரைப்படத்தின் அறிவிப்பு சமீபத்தில் வெளியான நிலையில் இந்த படத்தின் பிரம்மாண்டமான கட் அவுட் மலேசியாவில் வைக்கப்பட்டுள்ளது பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

என்னுடைய செயல் கடுப்பை ஏற்படுத்தலாம், ஆனால்.. வெற்றிக்கு பின் தல தோனி பேட்டி..!

என்னோட செயல் கடுப்பை ஏற்படுத்தலாம் ஆனால்.. என தல தோனி நேற்றைய போட்டியின் வெற்றிக்கு பின்னர் பேட்டி அளித்துள்ளார்.

14 சீசன்கள், 10 ஃபைனல், 4 கோப்பைகள்.. ஆனால் ஒரே கேப்டன் தல தோனி..!

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இதுவரை ஐபிஎல் தொடரில் 14 சீசன்கள் விளையாடிய நிலையில் அதில் 10வது முறையாக நேற்று இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்ற நிலையில் அந்த அணிக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது