close
Choose your channels

என்னன்னு கெஸ் பண்ணுங்க பார்க்கலாம்? எருமைச்சாணி ஹரிஜாவின் வைரல் புகைப்படம்!

Friday, February 19, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

எருமை சாணி என்ற யூடியூப் சேனல் மூலம் புகழ்பெற்ற ஹரிஜா. தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புகைப்படம் ஒன்றை பதிவு செய்து ’என்னவென்று கெஸ் பண்ணுங்கள் பார்க்கலாம்’ என்று கூறியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

பிரபல யூடியூப் சேனல் எருமை சாணி மூலம் புகழ் பெற்றவர் ஹரிஜா. இவர் எருமைச்சாணி விஜய்யுடன் நடித்த பல குறும்படங்கள் மிகப்பெரிய அளவில் ட்ரெண்டிங் ஆனது என்பது குறிப்பிடத்தக்கது. அதுமட்டுமின்றி சிவகார்த்திகேயன் நடித்த ’மிஸ்டர் லோக்கல்’ அதர்வா நடித்த’100’ உள்ளிட்ட ஒரு சில திரைப்படங்களிலும் அவர் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் கடந்த ஆண்டு எருமை சானி ஹரிஜா, தனது நீண்ட நாள் காதலரான அமர் என்பவரை திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பின்னர் அவர் எருமை சாணி சேனலில் நடிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் தற்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கணவருடன் இருக்கும் புகைப்படத்தை அவர் பதிவு செய்துள்ளார். அந்த புகைப்படத்தை பார்க்கும் போது அவருக்கு வளைகாப்பு நடந்தது போல் தெரிகிறது. மேலும் அதில் ’என்னவென்று கேஸ் பண்ணுங்க பார்க்கலாம்’ என்று பதிவு செய்திருக்கும் நிலையில் அவர் விரைவில் தாயாகப் போகிறார் என்றும் குட்டி ஹரிஜாவை விரைவில் எதிர்பார்க்கலாம் என்றும் எருமை சானி ஹரிஜாவுக்கு வாழ்த்துக்கள் என்றும் பலர் கமெண்ட் செய்து வருகின்றனர். ஆனால் ஒரு சிலரோ இது வேறு ஒரு குறும்படத்திற்கான ஷூட்டிங்கா? என்றும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

எருமைச்சாணி ஹரிஜா இந்த புகைப்படத்தை பதிவு செய்த ஒரு சில மணி நேரங்களில் ஒரு லட்சத்துக்கும் அதிகமானோர் இந்த புகைப்படத்தை லைக் செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment