ஈரோடு மகேஷ் மனைவியா இவர்? செம ரொமான்ஸ் புகைப்படங்கள்..!
Send us your feedback to audioarticles@vaarta.com
தொலைக்காட்சி பிரபலமான ஈரோடு மகேஷ் தனது மனைவியுடன் இருக்கும் ரொமான்ஸ் புகைப்படங்களை சமீபத்தில் பதிவு செய்துள்ள நிலையில் அந்த புகைப்படங்கள் வைரல் ஆகி வருகின்றன.
விஜய் டிவியில் உள்ள பல நிகழ்ச்சிகளில் குறிப்பாக ’கலக்கப்போவது யாரு’ ’நடுவுல கொஞ்சம் டிஸ்டர்ப் பண்ணுவோம்’ ’சிரிப்புடா’ உள்ளிட்ட நிகழ்ச்சிகளில் ஈரோடு மகேஷ் கலந்து கொண்டிருக்கிறார் என்பதும் தெரிந்ததே. மேலும் அவர் ஒரு சிறந்த பட்டிமன்ற பேச்சாளர் என்பதும் குறிப்பிடத்தக்கது. தொலைக்காட்சிகளில் மட்டுமின்றி '‘சிகரம் தொடு’ உள்ளிட்ட ஒரு சில படங்களிலும் ஈரோடு மகேஷ் நடித்துள்ளார்.
இந்த நிலையில் தனது நீண்ட நாள் காதல்லியான ஸ்ரீதேவி என்பவரை ஈரோடு மகேஷ் திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிக்கு ஒரு மகள் உள்ளார். ஈரோடு மகேஷ் அவ்வப்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மனைவி மற்றும் குழந்தை உடன் இருக்கும் புகைப்படங்களை பதிவு செய்து வருவார்.
அந்த வகையில் சமீபத்தில் அவர் மனைவியுடன் ரொமான்ஸ் மூடில் இருக்கும் புகைப்படங்களை பதிவு செய்துள்ள நிலையில் இந்த புகைப்படத்திற்கு ஏராளமான லைக்ஸ் கமெண்ட்ஸ் குவிந்து வருகிறது. நடிகை ஸ்ரீதேவி உயிரோடு வந்தது போலவே இருக்கிறது என ஈரோடு மகேஷின் மனைவியை பார்த்து சிலர் கமெண்ட் பதிவு செய்துள்ளனர்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com