இன்று முதல் சென்னைக்குள் பயணிக்கவும் இ-பதிவு கட்டாயம்! தமிழக அரசு அறிவிப்பு

  • IndiaGlitz, [Tuesday,May 18 2021]

தமிழகத்தில் தற்போது ஊரடங்கு உத்தரவு அமலில் இருக்கும் நிலையில் மாவட்டம் விட்டு மாவட்டம் செல்வதற்கோ அல்லது மாவட்டங்களுக்குள் செல்வதற்கோ இ-பதிவு கட்டாயம் என தமிழக அரசு அறிவித்து இருந்தது என்பது தெரிந்ததே. இதற்கென பிரத்தியேகமாக தமிழக அரசு வெளியிட்டுள்ள இணையதளத்தில் பதிவு செய்து பின்னர் தான் மாவட்டங்களுக்குள் அல்லது மாவட்டங்களுக்கு வெளியே பயணம் செய்ய முடியும் என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் இன்று முதல் சென்னைக்குள் பயணம் செய்ய இ-பதிவு கட்டாயம் என தமிழக அரசு அறிவித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இன்று முதல் சென்னை மாநகர எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் காலை 10 மணிக்கு மேல் வாகனங்களில் செல்ல இ-பதிவு அவசியம் என்றும் இ-பதிவு இல்லாமல் வெளியே சுற்றினால் வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

அவசர மருத்துவ சிகிச்சை மற்றும் தவிர்க்க முடியாத தேவைகளை தவிர வேறு எந்த நடவடிக்கைகளுக்கும் இ-பதிவு இல்லாமல் பொதுமக்கள் அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்று தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியுள்ளது.

More News

இரண்டு பாகங்களாக வெளிவரும் அல்லு அர்ஜூனின் 'புஷ்பா'

பிரபல தெலுங்கு நடிகர் அல்லு அர்ஜுன் நடிப்பில் உருவாகிவரும் 'புஷ்பா'திரைப்படம் இரண்டு பாகங்களாக வெளியாகும் என்ற அறிவிப்பு ரசிகர்களுக்கு இரட்டிப்பு மகிழ்ச்சியாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

உலக அளவுக்கு செல்லும் 'ஒத்த செருப்பு' திரைப்படம்: பார்த்திபன் அறிவிப்பு

கடந்த 2019ஆம் ஆண்டு வெளியான 'ஒத்த செருப்பு' என்ற திரைப்படத்தில் பார்த்திபன் ஒருவர் மட்டுமே நடித்து இருப்பார் என்பதும் அது மட்டுமன்றி அவரே இந்த படத்தை தயாரித்து இயக்கி இருந்தார்

ஞானதந்தையை இழந்து விட்டேன்: நடிகர் சிவகுமார் உருக்கம்!

பிரபல தமிழ் எழுத்தாளர் கி ராஜநாராயணன் அவர்கள் இன்று காலமானதை அடுத்து ஒரு ஞான தந்தையை நான் இழந்து விட்டேன் என நடிகர் சிவகுமார் உருக்கமாக தெரிவித்துள்ளார்

ரூ.1 கோடி நிவாரண நிதி வழங்கிய ஆச்சி மசாலா பத்மசிங் ஐசக்!

தமிழகத்தில் கொரோனா வைரஸ் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது என்பதும் இன்றும் 33 ஆயிரத்துக்கும் அதிகமான பாதிப்பு இருந்தது என்று சுகாதாரத் துறை அறிவித்துள்ளது

கொரோனா நிவாரண நிதியாக ரூ.1 கோடி கொடுத்த அதிமுக! எம்பி, எம்.எல்.ஏக்களின் ஒருமாத சம்பளமும் அளிப்பதாக அறிவிப்பு

தமிழகத்தில் கொரோனா வைரஸ் மிக வேகமாக பரவி வருவதாஅல் தமிழக முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்காக பலரும் தாராளமாக நிதியுதவி செய்து வருகின்றனர்