ஈபிஎஸ்-ஓபிஎஸ் அணிக்கு இரட்டை இலை: தேர்தல் ஆணையம் அறிவிப்பு

  • IndiaGlitz, [Thursday,November 23 2017]

அதிமுகவின் சின்னமான இரட்டை இலை சின்னம் ஈபிஎஸ் -ஓபிஎஸ் அணிக்கே என தேர்தல் ஆணையம் தீர்ப்பு வழங்கியுள்ளது. பெரும்பான்மையான சட்டமன்ற நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவு அந்த அணிக்கே இருப்பதால் இந்த சின்னம் வழங்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து அதிமுக கட்சி, சின்னம், கொடி ஆகியவற்றை பயன்படுத்தி கொள்ளும் முழு உரிமை ஈபிஎஸ்-ஓபிஎஸ் அணிக்கே கிடைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

தேர்தல் ஆணையத்தின் இந்த அறிவிப்பை அடுத்து தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலும் ஈபிஎஸ்-ஓபிஎஸ் அணியினர் இரட்டை இலை வெற்றியை கொண்டாடுகின்றனர். ஜெயலலிதா ஆசி, கடவுளின் ஆசியோடு இரட்டை இலை சின்ன வழக்கில் நல்ல தீர்ப்பு கிடைத்துள்ளதாகவும், ஒன்றரை கோடி தொண்டர்கள் மகிழும் வண்ணம் வந்த தீர்ப்பு இது என்றும் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார்

இரட்டை இலை கிடைத்ததன் பின்னணியில் மத்திய அரசு இருக்கிறது என்பது தவறான கருத்து என்றும், எங்கள் பக்கம் நியாயம் இருந்ததாலும், ஆதாரங்களை சரியாக ஒப்படைத்த காரணத்தாலும் தான் எங்களுக்கு இரட்டை இலை கிடைத்துள்ளது என்றும் முதல்வர் மேலும் கூறினார்.

More News

தல அஜித்தின் அடுத்த பட டைட்டில் அறிவிப்பு

தல அஜித் நடிப்பில் 'விவேகம்' திரைப்படம் சமீபத்தில் வெளிவந்து வெற்றி பெற்ற நிலையில் அவருடைய அடுத்த படம் குறித்த அறிவிப்பு மிக விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

சிறப்பு தோற்றத்தில் சீயான் விக்ரம் நடிக்கும் படம்

சீயான் விக்ரம் தற்போது கவுதம் மேனன் இயக்கி வரும் 'துருவ நட்சத்திரம்', விஜய்சந்தர் இயக்கி வரும் 'ஸ்கெட்ச்' மற்றும் ஹரி இயக்கி வரும் 'சாமி 2' ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.

கமல் அல்லது அஜித் முதல்வராக வேண்டும்: சுசீந்திரன்

பிரபல இயக்குனர் சுசீந்திரன் கடந்த இரண்டு நாட்களாக கந்துவட்டி கொடுமையால் உயிரிழந்த அசோக்குமாரின் மரணம் குறித்து தனது கருத்துக்களை ஆவேசமாக தெரிவித்து வருகிறார்

அசோக்குமாரின் அகாலமரணம் போல் இனி நிகழவிடக்கூடாது: கமல்ஹாசன்

சசிகுமாரின் உறவினர் அசோக்குமார் நேற்றுமுன் தினம் கந்துவட்டி கொடுமையால் கடிதம் எழுதி வைத்துவிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் தமிழ் திரையுலகினர்களை அதிர்ச்சி அடைய செய்துள்ளது

டுவிட்டர் முன்னேற்ற கழகம்: கமல் கட்சிக்கு பெயர் செலெக்ட் செய்த எச்.ராஜா

உலகநாயகன் கமல்ஹாசன் கடந்த சில மாதங்களாக ஆட்சியாளர்களுக்கு எதிராகவும், ஊழல்வாதிகளுக்கு எதிராகவும் தைரியமான கருத்துக்களை தெரிவித்து வருகிறார். சமூக அக்கறையுடன் அவர் தெரிவித்து வரும் கருத்துக்கள்