விமர்சனங்களைத் துச்சமாக மதித்து வெற்றிக்கொடி… சூறாவளி பிரச்சாரத்தில் தமிழக முதல்வர்!!!

 

தமிழக சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் 5 மாதத்திற்கும் குறைவாகவே உள்ள நிலையில் தமிழக அரசியல் களம் சூடுபிடித்து உள்ளது. இதனால் அரசியல் கட்சிகள் மக்களை தேடி சென்று சந்திக்கும் சூழல் தற்போது தமிழகத்தில் நிலவி வருகிறது. இன்னும் தேர்தல் அறிக்கை பணிகள் மற்றும் கூட்டணி பேச்சு வார்த்தைகள் அதிகாரப்பூர்வமாக துவங்காத நிலையில் கட்சிகள் தேர்தல் பிரச்சாரங்களை தொடங்கி உள்ளன.

இந்நிலையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி கடந்த 19 ஆம் தேதி தனது சொந்த ஊரான எடப்பாடியில் இருந்து தனது முதல் பிரச்சாரத்தைத் தொடங்கினார். இதையடுத்து அவசர அவசரமாக மற்ற கட்சிகளும் தேர்தல் பிரச்சாரத்தில் களம் இறங்கி உள்ளன. இந்நிலையில் மற்ற கட்சிகள் தங்களுடைய பழங்கால சாதனைகளை கூறி வாக்கு சேகரித்து வரும்போது முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இந்த ஆட்சியில் நடைபெற்ற சாதனைகளையும் மக்களுக்கு செய்த உதவிகளையும் அடுக்கி வாக்குச் சேகரித்து வருகிறார்.

கொரோனா நேரத்தில் தமிழக அரசு மக்களுக்கு பக்கப்பலமாக இருந்தது. அதேபோல புயல் பாதுகாப்பிலும் தமிழக அரசு சிறப்பாக செயல்பட்டது. மேலும் கொரோனாவால் வீழ்ந்த பொருளாதாரத்தை சரிசெய்து இருக்கிறது. இதுபோன்ற சாதனைகளைச் சொல்லி முதல்வர் திறமையாக வாக்கு சேகரிக்க தொடங்கி இருக்கிறார். முன்னாதாக தமிழகத்தில் பெரும் தலைவர்கள் எல்லாம் வீழ்ந்து விட்டார்கள், தமிழக அரசியல் இனி என்னாகுமோ? என்கிற ரீதியில் விமர்சனங்கள் வைக்கப்பட்டு வந்தன.

ஆனால் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தனக்கு கொடுக்கப்பட்ட பொறுப்பை மிகச் சரியாகவும் திறமையாகவும் நடித்தி வந்திருக்கிறார். அவர் தன்னுடைய ஆட்சி காலத்தில் ஏற்பட்ட சிக்கல்களுக்கு தீர்வு கண்டு மக்களுடன் இணக்கமான ஆட்சியை கொடுத்து இருக்கிறார். இந்த ஆட்சியின் சாதனைகளை எடுத்துச் சொல்லியே அவர் வாக்கு சேகரித்து வருகிறார். ஆனால் தமிழகத்தின் மற்ற கட்சிகள் இதுபோன்ற நாகரிகமான அரசியலில் ஈடுபடவில்லை என்றும் அவர் வருத்தம் தெரிவித்து வருகிறார். இந்நிலையில் தமிழகச் சட்டமன்ற தேர்தலுக்கு குறைந்த மாதங்களே உள்ள நிலையில் தனது திறமையான பேச்சின் மூலம் சூறாவளி வாக்குச் சேகரிப்பில் ஈடுபட உள்ளதாக அறிவிப்பும் வெளியிட்டு இருக்கிறார்.