கொரோனா தடுப்பு நிதியாக ரூ.1150 அளித்த 4ஆம் வகுப்பு மாணவன்: நன்றி கூறிய முதல்வர்
Send us your feedback to audioarticles@vaarta.com
கொரோனா தடுப்பு நிதியாக மத்திய மாநில அரசுகளுக்கு தொழிலதிபர்களும் திரையுலக பிரபலங்களும் லட்சக்கணக்கிலும் கோடிக்கணக்கிலும் நிதியுதவி செய்து வரும் நிலையில் 4ஆம் வகுப்பு மாணவன், தான் சேமித்து வைத்திருந்த ரூ.1150ஐ, முதலமைச்சர் நிவாரண நிதிக்கு அனுப்பி, முதல்வருக்கு ஒரு கடிதமும் எழுதியுள்ளார். அந்த கடிதத்தில் கூறப்பட்டுள்ளதாவது:
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கு வணக்கம். எனது பெயர் விபி.விஷாக். திருப்பூர் காந்திநகர் எவிபி பள்ளியில் 4ஆம் வகுப்பு படுக்கின்றேன். கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து தமிழ்நாட்டு மக்களை பாதுகாக்க நான் சேமித்து வைத்திருந்த ரூ.1150 பணத்தை எனது தந்தையின் கணக்கில் இருந்து முதலமைச்சர் பொது நிவாரண நிதிக்கு அனுப்பி வைத்துள்ளேன். தமிழக மக்கள் அனைவரும் விரைவில் இயல்பு நிலைக்கு வரவேண்டும் என்று ஆண்டவனிடம் வேண்டுகிறேன். என்று எழுதியுள்ளார்.
இந்த மாணவனின் தந்தைக்கு நன்றி தெரிவித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் தனது டுவிட்டரில் கூறியிருப்பதாவது: 'கொரோனா நிவாரணத்திற்காக தான் சேமித்து வைத்திருந்த தொகையை தங்கள் மகன் நிதியுதவியாக அளித்திருப்பது நெகிழ்ச்சி அளிக்கிறது. இச்சிறுவயதிலேயே சேமிக்கும் பழக்கமும் நாட்டிற்கு உதவும் உயர்ந்த எண்ணமும் கொண்ட சிறுவன் விஷாக் தம்பிக்கு எனது அன்பார்ந்த நன்றியையும் வாழ்த்துகளையும் தெரிவிக்கவும்’ என்று குறிப்பிட்டுள்ளார். சிறுவனின் கடிதமும் அதற்கு நன்றி கூறிய முதல்வரின் டுவிட்டும் தற்போது வைரலாகி வருகிறது.
கொரோனா நிவாரணத்திற்காக தான் சேமித்து வைத்திருந்த தொகையை தங்கள் மகன் நிதியுதவியாக அளித்திருப்பது நெகிழ்ச்சி அளிக்கிறது.
— Edappadi K Palaniswami (@CMOTamilNadu) April 10, 2020
இச்சிறுவயதிலேயே சேமிக்கும் பழக்கமும் நாட்டிற்கு உதவும் உயர்ந்த எண்ணமும் கொண்ட சிறுவன் விஷாக் தம்பிக்கு எனது அன்பார்ந்த நன்றியையும் வாழ்த்துகளையும் தெரிவிக்கவும் https://t.co/zkaDFzktrk
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments