ஓபிஎஸ்-ஈபிஎஸ் அணிகள் இணைப்பு குறித்து கமல்ஹாசன் விமர்சனம்
- IndiaGlitz, [Tuesday,August 22 2017]
உலக நாயகன் கமல்ஹாசன் கடந்த சில நாட்களாகவே தமிழக அரசு குறித்தும், அமைச்சர்கள் குறித்து தனது சமூக வலைத்தளத்தில் விமர்சனம் செய்து வருகிறார். கமல்ஹாசனின் கருத்துக்கு ஒருசில அமைச்சர்கள் மரியாதையுடனும் சிலர் ஒருமையிலும் பதில் கூறி வருகின்றனர்.
இந்த நிலையில் அதிமுகவின் இரண்டு அணிகளான ஓபிஎஸ், ஈபிஎஸ் அணிகள் நேற்று அதிகாரபூர்வமாக இணைந்தன. இந்த இணைப்பு நடந்து கொண்டிருக்கும் நிலையில் கமல்ஹாசன் தனது சமூக வலைத்தளத்தில் ஒரு கருத்தை பதிவு செய்தார். அதில் 'காந்திக்குல்லா! காவிக்குல்லா! கஷ்மீர்குல்லா!! தற்போது கோமாளிக்குல்லா, தமிழன் தலையில் . போதுமா இன்னும் வேண்டுமா? தயவாய் வெகுள்வாய் தமிழா' என்று குறிப்பிட்டிருந்தார். இந்த பதிவில் அவர் யாரையும் குறிப்பிட்டு கூறவில்லை என்றாலும் இணைப்பு நடந்து கொண்டிருந்த நேரத்தில் இந்த கருத்து பதிவு செய்யப்பட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
இந்த நிலையில் கமல்ஹாசனின் இந்த கருத்துக்கு அதிமுக தலைவர்கள் யாரும் பதிலளிக்காமல் இருந்த நிலையில் தமிழக பாஜக தலைவர் தமிழிசை செளந்தரராஜன் கமலின் கருத்துக்கு கண்டனம் தெரிவித்தார். அவர் தனது சமூக வலைத்தளத்தில், 'போலிக்குல்லாவும் கேலிக்குல்லாவும் போடுபவர்கள் காந்தி குல்லாவையும் காவிக்குல்லாவையும் விமர்சனம் செய்வதா? என்று கூறியுள்ளார்.