தினகரன் அணியில் மேலும் 10 எம்.எல்.ஏக்கள்: ஆட்சி தப்பிக்குமா?

  • IndiaGlitz, [Tuesday,August 22 2017]

அதிமுகவின் ஓபிஎஸ் அணி, ஈபிஎஸ் நேற்று இணைந்ததால் அதிருப்தி அடைந்த தினகரன் அணியின் ஆதரவு எம்.எல்.ஏக்கள் இன்று கவர்னரை சந்தித்து எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அரசுக்கு தங்கள் ஆதரவு இல்லை என்று தெரிவித்தனர். இதனால் எந்த நேரமும் ஆட்சி கவிழும் நிலை ஏற்பட்டுள்ளதாக அரசியல் விமர்சகர்கள் கருத்து கூறி வருகின்றனர்.
தற்போது தினகரன் அணிக்கு 19 எம்.எல்.ஏக்கள் ஆதரவு இருப்பதாக கூறப்படும் நிலையில் மேலும் பத்து எம்.எல்.ஏக்கள் அவரது அணியில் இணைய தயாராக இருப்பதாக செய்திகள் வெளிவந்துள்ளது. இந்த செய்தி உண்மையென்றால் ஆட்சி கவிழும் ஆபத்து அதிகரித்துள்ளது.
இந்த நிலையில் தற்போதைய அரசியல் சூழல் குறித்து முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அமைச்சர்கள் அவசர ஆலோசனை செய்து வருவதாக செய்திகள் வெளிவந்துள்ளது.

More News

விவேகத்தை விட அஜித் பெரிசு: 'மெர்சல்' சர்ச்சைக்கு பார்த்திபன் பதில்

எந்த ஒரு திரைப்படத்தின் விழாக்களிலும் நடிகர், இயக்குனர் பார்த்திபன் கலந்து கொண்டு அவரது கலகலப்பான பேச்சால் அனைவரையும் கவர்ந்துவிடுவார்.

ஆகஸ்ட் 26ஆம் தேதி படப்பிடிப்புகள் ரத்து: திடீர் அறிவிப்பு ஏன்?

கடந்த சில நாட்களாகவே ஜிஎஸ்டி உள்பட பல்வேறு காரணங்களுக்காக படப்பிடிப்பு ரத்து செய்யப்படுவதும், திரையரங்குகள் மூடப்படுவதுமான நிகழ்வுகள் இருந்து வருகிறது.

லதாரஜினி பள்ளி குறித்து நீதிமன்றத்தின் முக்கிய உத்தரவு

சூப்பர் ஸ்டார் ரஜினியின் மனைவி லதா ரஜினிகாந்த் நடத்தி வரும் பள்ளியின் கட்டிடத்திற்கு கடந்த சில வருடங்களாக வாடகை தரவில்லை என்று கூறி அந்த கட்டிடத்தின் உரிமையாளர் கடந்த 16ஆம் தேதி பூட்டு போட்டார்.

விஜய் சேதுபதி- நயன்தாரா பீரியட் படத்துக்கு ஏ.ஆர்.ரகுமான் இசை

மெகா ஸ்டார் சிரஞ்சீவியின் 'கைதி நம்பர் 150' கடந்த ஆண்டு வெளியாகி சூப்பர் ஹிட் ஆகியுள்ள நிலையில் அவருடைய அடுத்த படம் குறித்த அறிவிப்பு இன்று அவருடைய பிறந்த நாள் அன்று அதிகாரபூர்வமாக வெளியாகியுள்ளது.

எடப்பாடி பழனிச்சாமி அரசுக்கு ஆதரவு வாபஸ்: தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்கள் அதிரடி

அதிமுகவில் ஓபிஎஸ், ஈபிஎஸ், தினகரன் என மூன்று அணிகள் இருந்த நிலையில் நேற்று ஓபிஎஸ், ஈபிஎஸ் அணிகள் அதிகாரபூர்வமாக இணைந்தது.