அவதூறு பேச்சு குறித்து சென்னை திருவொற்றியூரில் இபிஎஸ் கண்ணீர் மல்க பேச்சு!
Send us your feedback to audioarticles@vaarta.com
திமுக துணை பொதுச் செயலாளரும் முன்னாள் மத்திய அமைச்சருமான ஆ.ராசா கடந்த சில தினங்களுக்கு முன்பு தேர்தல் பிரச்சாரத்தின் போது தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியை இழிவுபடுத்தும் வகையில் பேசியதாக தமிழகம் முழுவதும் தற்போது பரபரப்பு ஏற்பட்டு இருக்கிறது. இதனால் ஆ.ராசாவின் பேச்சை கண்டித்து அதிமுக தொண்டர்கள் சில இடங்களில் ஆர்ப்பாட்டங்களிலும் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் சென்னை திருவொற்றியூரில் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்ட தமிழக முதல்வர், மக்கள் முன்னிலையில் இந்நிகழ்வைக் குறித்து பேசியுள்ளார். மேலும் கண்ணீர் மல்க முதல்வர் கூறிய வார்த்தைகள் அங்கு கூடியிருந்த பலரையும் கடும் துக்கத்தில் ஆழ்த்தியதாகக் அதிமுக தொண்டர்கள் சார்பில் கூறப்பட்டு வருகிறது. மேலும் “இதுபோன்ற நிகழ்வு ஒரு முதல்வருக்கே நடக்கிறது என்றால் சாதாரண மக்களை நினைத்துப் பாருங்கள்“ என தமிழக முதல்வர் அங்கு கூடியிருந்த மக்களை நோக்கி கேட்டதும் அங்கு இருந்தவர்களுக்கு மேலும் கலக்கத்தை ஏற்படுத்தியதாகவும் கூறப்படுகிறது.
வரும் சட்டமன்றத் தேர்தலை ஒட்டி தமிழகம் முழுவதும் தீவிரத் தேர்தல் பிரச்சாரம் நடைபெற்று வருகிறது. இந்தப் பிரச்சாரத்திற்கு இடையே ஆளும் கட்சி மற்றும் எதிர்க்கட்சி என இருத்தரப்பினரும் விமர்சனங்களை வெளியிட்டு வருகின்றனர். அந்த வகையில் வெளிப்படும் விமர்சனங்கள் அரசியல் நாகரிகத்தோடு இருக்க வேண்டும் என்றும் அது ஒருவருடைய தனிப்பட்ட வாழ்க்கையை நினைவுப் படுத்துவதாவோ அல்லது இழிவுப் படுத்துவதாகவே இருக்கக் கூடாது என்றும் கூறப்பட்டு வருகிறது. ஆனால் தற்போது அரசியல் நாகரிகம் இல்லாமல் எதிர்க்கட்சிகள் தொடர்ந்து தமிழக முதல்வரை விமர்சித்து வருவதாக அதிமுக சார்பில் கடும் கண்டனம் எழுந்துள்ளது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments