பயிர்க்கடன் தள்ளுபடிக்கான ரசீதை வழங்கினார் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி!
- IndiaGlitz, [Saturday,February 13 2021]
கடந்த சில தினங்களுக்கு முன்பு கூட்டுறவு வங்கிகளில் பெறப்பட்ட தமிழக விவசாயிகளின் ரூ.12,110 கோடி கடனை தள்ளுபடி செய்து அறிவிப்பு வெளியிட்டார் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி. இந்த அறிவிப்பினால் 16.43 லட்சம் விவசாயிகள் பலன் அடைவர் என்பதும் குறிப்பிடத்தக்கது. தமிழகச் சட்டப்பேரவை கூட்டத் தொடரின்போது 110 விதியின் கீழ் இந்த அறிவிப்பை வெளியிட்ட தமிழக முதல்வர் இன்னும் 10-15 நாட்களில் இதற்கான ரசீது வழங்கப்படும் என கூறி இருந்தார்.
இந்த அறிவிப்பை தொடர்ந்து தற்போது விவசாயிகளிடன் பயிர்க்கடன் தள்ளுபடிக்கான திட்டத்தை முறைப்படி துவக்கி வைத்து அதற்கான ரசீதையும் வழங்கினார். தமிழக விவசாயிகளிடம் பெருத்த வரவேற்பை பெற்ற இத்திட்டத்தினால் பலரும் பலன் அடைந்து வருகின்றனர்.
இதைத்தவிர விவசாயிகளுக்கு 24 மணி நேரமும் மும்முனை இலவச மின்சாரத் திட்டத்தையும் சமீபத்தில் துவக்கி வைத்துள்ளார். மேலும் தமிழர்களின் பெருமையை பறைச்சாற்றும் கீழடி 7 ஆம் கட்ட தொல்பொருள் அகழாய்வுகளையும் தற்போது காணொலி மூலம் துவக்கி வைத்தார். இத்தகைய நடவடிக்கைகளினால் தமிழக முதல்வருக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன.