ஜெயலலிதா இறந்த தினத்தில் ராம்மோகன் ராவ் செய்தது என்ன? திடுக்கிடும் தகவல்கள்
Send us your feedback to audioarticles@vaarta.com
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா இறந்த தினத்தில் தமிழகம் மட்டுமின்றி நாடே சோகத்தில் மூழ்கிய நிலையில் அன்றைய தினம் மறைந்த முதல்வரின் இறுதிச்சடங்கிற்கு ஏற்பாடு செய்யாமல் தன்னிடம் உள்ள பெருமளவு பணத்தை காப்பாற்றுவதில் தலைமைச்செயலாளர் குறியாக இருந்துள்ளதாக கூறப்படுகிறது. இதுகுறித்து வருமான வரித்துறை அதிகாரிகள் நடத்திய விசாரணையில் தெரிய வந்துள்ளதாக திடுக்கிடும் தகவல்கள் வெளிவந்துள்ளது.
ஜெயலலிதா மறைந்த தினத்தில் ராமமோகனராவும், சேகர்ரெட்டியும் தொலைபேசியில் நீண்ட நேரம் பேசியது கண்டுபிடிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. அந்த போன் உரையாடலில் பல நூறு கோடி ரூபாயை எப்படி பாதுகாப்பாக வைத்துக் கொள்வது? என்று ராம மோகனராவும், சேகர்ரெட்டியும் விவாதித்து இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ஜெயலலிதா மரணம் அடைந்து பரபரப்பான சூழ்நிலை உருவான நேரத்தில் பொறுப்புடன் செயல்பட வேண்டிய ஒரு தலைமை செயலாளர் தனது பணத்தை பதுக்குவது பற்றி பேசி இருப்பது குறித்து தெரிய வந்ததும் தலைமைச்செயலக அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்தனர்.
இதுபற்றி வருமான வரித்துறை உயர் அதிகாரி ஒருவர் கூறியதாவது:- ஜெயலலிதா மரணம் அடைந்த தினத்தன்று இறுதி சடங்கு நிகழ்ச்சிகளுக்கான ஏற்பாடுகளில் கவனம் செலுத்துவதை விட்டுவிட்டு, சேகர்ரெட்டியிடம் பல தடவை ராமமோகனராவ் பேசி இருப்பது எங்களுக்கு தெரிந்தது. அதை ஆய்வு செய்த போதுதான் அவர்களது முறைகேடு உறுதியானது. தொடர்ந்து நாங்கள் சேகர் ரெட்டியின் போனை கண்காணித்தோம். அதன் மூலம் ராமமோகனராவ் தொடர்பு மிக எளிதாக எங்களுக்கு தெரிந்தது. அதன் அடிப்படையிலேயே நாங்கள் சோதனை நடவடிக்கையை எடுத்துள்ளோம்' என்று கூறியுள்ளார்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Contact at support@indiaglitz.com
Comments