'எந்திரன்' கதை திருட்டு வழக்கு: சென்னை ஐகோர்ட் அதிரடி உத்தரவு..!
Send us your feedback to audioarticles@vaarta.com
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் பிரமாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் உருவான 'எந்திரன்’ படத்தின் கதை தன்னுடையது என ஆரூர் தமிழ்நாடன் என்பவர் தாக்கல் செய்த வழக்கின் அதிரடி உத்தரவு நேற்று பிறப்பிக்கப்பட்ட நிலையில் திரையுலகில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
எழுத்தாளரும் கவிஞருமான ஆரூர் தமிழ்நாடன் என்பவர் ’எந்திரன்’ படத்தின் கதை தன்னுடைய ’ஜிகுபா’ என்ற கதையிலிருந்து திருடப்பட்டது என்று கடந்த 1996 ஆம் ஆண்டு நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு பல ஆண்டுகளாக நடைபெற்று வந்த நிலையில் தற்போது சென்னை உயர்நீதிமன்றம் இந்த வழக்கில் அதிரடி தீர்ப்பு வழங்கியுள்ளது.
இந்த தீர்ப்பில் மனுதாரரின் கதைக்கும் 'எந்திரன்’ படத்தின் கதைக்கும் அதிக அளவு வேறுபாடுகள் இருப்பதாகவும் இதனால் இந்த வழக்கை தள்ளுபடி செய்வதாகவும் கூறினார். மேலும் வழக்கின் செலவையும் மனுதாரர் வழங்க வேண்டும் என்று உத்தரவிட்டார். இதையடுத்து நீண்ட காலமாக இருந்து வந்த 'எந்திரன்’ படத்தின் கதை திருட்டு பிரச்சனை முடிவுக்கு வந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவான 'எந்திரன்’ திரைப்படத்தில் ரஜினிகாந்த், ஐஸ்வர்யா ராய் உள்பட பலர் நடித்திருந்தனர். இசைப்புயல் ஏஆர் ரகுமான் இசையில் உருவான இந்த படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments