வெள்ள நிவாரண நிதியாக 'எந்திரன் 2' தயாரிப்பாளர் கொடுத்த மிகப்பெரிய தொகை

  • IndiaGlitz, [Friday,December 18 2015]

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் ஷங்கர் இயக்கத்தில் லைகா புரடொக்ஷன்ஸ் நிறுவனம் பிரமாண்டமாக தயாரிக்கவுள்ள 'எந்திரன் 2' படத்தின் படப்பிடிப்பு நேற்று முதல் தொடங்கிய நிலையில், லைகா நிறுவனத்தின் சேர்மன் அல்லிராஜா சுபாஷ்கரன் தமிழக வெள்ள நிவாரண நிதியாக ரூ.5 கோடி கொடுத்துள்ளார்.


இன்று தமிழக அரசின் நிதித்துறை செயலாளரை நேரில் சந்தித்து ரூ.5 கோடிக்கான காசோலையை முதலமைச்சரின் பொது நிவாரண நிதியாக சுபாஷ்கரன் கொடுத்துள்ளதாக உறுதிப்படுத்தப்பட்ட தகவல் வெளிவந்துள்ளது.

ஏற்கனவே கோலிவுட் திரையுலகினர்களும், டோலிவுட், பாலிவுட் திரையுலகினர்களும் லட்சக்கணக்கிலும் கோடிக்கணக்கிலும் முதலமைச்சரின் நிவாரண நிதியாக அள்ளி வழங்கியுள்ள நிலையில் லைகா நிறுவனமும் அவர்களுடன் இணைந்து வெள்ளத்தால் பாதிக்கப்பட மக்களுக்கு உதவி செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

More News

ரஜினி, விஜய்யை அடுத்து ஜெயம்ரவி?

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடித்த 'கத்தி' படத்தின் மூலம் கோலிவுட்டில் கால்பதித்த லைகா புரடொக்ஷன்ஸ் நிறுவனம்...

பீப் பாடல் விவகாரம். சென்னை ஐகோர்ட் முக்கிய உத்தரவு

பீப் பாடல் விவகாரம் குறித்து கோவை காவல்நிலையத்தில் நடிகர் சிம்பு நாளை ஆஜராக வேண்டும் என சம்மன் அனுப்பப்பட்டுள்ள நிலையில்...

இளையராஜாவுக்கு சென்னை பத்திரிகையாளர் சங்கம் கண்டனம்

அனிருத் இசையில் சிம்பு பாடியதாக கூறப்படும் பீப் பாடல் குறித்த கேள்விக்கு இசைஞானி இளையராஜா கோபமாக பத்திரிகையாளர்களிடம் நடந்து கொண்டதாக நேற்று செய்திகள் ...

சிவாஜி சிலை அகற்றும் வழக்கில் நீதிபதிகள் முக்கிய உத்தரவு

சென்னை மெரினா கடற்கரை எதிரில் உள்ள, நடிகர்திலகம் சிவாஜி சிலையை அகற்றும் வழக்கு குறித்து இன்று விசாரணை ...

தனுஷின் 'தங்கமகன்' படத்திற்கு டபுள் சென்சுரி அந்தஸ்து

இந்தியாவிலேயே அதிக திரைப்படங்கள் ரிலீஸ் செய்யும் கோலிவுட் திரையுலகில் வருடத்திற்கு சுமார் 200 படங்கள் வெளியாகின்றது...