ரஜினியின் '2.0': எந்திர லோகத்து சுந்தரியே பாடல் விமர்சனம்
Send us your feedback to audioarticles@vaarta.com
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் ஷங்கர் இயக்கத்தில் ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் உருவான '2.0' படத்தின் இரண்டு பாடல்கள் நேற்று வெளியாகியுள்ளது. இந்திய திரையுலகில் இதுவரை இல்லாத அளவில் மிக பிரமாண்டமாக முறையில் இந்த படத்தின் இசை வெளியீட்டு விழாவை நடத்தியுள்ளனர் லைகா நிறுவனத்தினர்.
நேற்று வெளியான இரண்டு பாடல்களில் ஒன்று 'எந்திர லோகத்து சுந்தரியே' என்று தொடங்கும் பாடல். இந்த பாடலை மதன்கார்க்கி எழுதியுள்ளார். சித்ஸ்ரீராம், சாஷா திருபதி ஆகியோர் பாடியுள்ளனர்.
'எந்திரன்' படத்தில் இடம்பெற்ற 'இரும்பிலே ஒரு இருதயம்' என்ற பாடலின் ஸ்டைலில் இந்த பாடல் உள்ளது. 'இரும்பிலே ஒரு இருதயம்' என்ற பாடல் ஒரு எந்திரன், உயிருள்ள பெண் ஒருவர் மீது கொண்ட காதலின் வடிவில் இருக்கும். ஆனால் 'எந்திர லோகத்து சுந்தரியே' பாடல் ஒரு ரோபோவுக்கும் இன்னொரு ரோபோவுக்கும் இடையிலான காதல் போன்று உள்ளது.
எந்திர லோகத்து சுந்தரியே
எண்களில் காதலை சிந்துரியே
எஞ்சினை அள்ளி கொஞ்சுரியே
ஹேய் மின்சார சம்சாரமே
என்ற வரிகள் இதனை உறுதி செய்கின்றது. மேலும்
ரத்தம் அல்லா கன்னங்களில்
முத்தம் வைக்கட்டா
போன்ற வரிகளும்,
உன் பஸ்ஸில் கண்டக்டர் நான்..
கணினி ரஜினி நீ
போன்ற வரிகளும் இந்த பாடல் இரண்டு ரோபோக்களின் பாடல் என்பதை மேலும் உறுதி செய்கின்றது.
பொதுவாக ரஹ்மான் பாடல்கள் என்றால் இரண்டு மூன்று முறை கேட்ட பின்னரே மனதில் தங்கும். ஆனால் இந்த பாடல் முதல்முறை கேட்கும்போதே மனதை கவர்வது மட்டுமின்றி மீண்டும் மீண்டும் கேட்க தூண்டுவதே ரஹ்மானின் இசைக்கு கிடைத்த வெற்றியாக கருதப்படுகிறது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments