close
Choose your channels

'கெத்து' தமிழ் வார்த்தைதான். ஆதாரத்துடன் கூறும் உதயநிதி

Monday, January 18, 2016 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

கடந்த பொங்கல் தினத்தில் வெளியான உதயநிதி ஸ்டாலினின் 'கெத்து' திரைப்படம் சென்சார் அதிகாரிகளால் 'யூ' சர்டிபிகேட் பெற்றிருந்தும் இந்த படத்திற்கு தமிழக அரசின் வரிவிலக்கு கிடைக்கவில்லை. இந்த படத்தின் டைட்டிலான 'கெத்து' என்பது தமிழ் பெயர் இல்லை என்றும் அதனால் வரிவிலக்கு மறுக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

இந்நிலையில் உதயநிதி ஸ்டாலின் தன்னுடைய சமூக வலைத்தள பக்கத்தில் இதுகுறித்து விளக்கம் அளித்துள்ளார். 'கெத்து' என்பது தமிழ் வார்த்தைதான் என்றும், தமிழ் அகராதியில் 'கெத்து' என்ற சொல் இருக்கின்றது என்றும் அவர் கூறியுள்ளார். அதுமட்டுமின்றி 'கெத்து' என்ற சொல் இருக்கும் தமிழ் அகராதியின் பக்கத்தையும் அவர் புகைப்படம் எடுத்து தனது சமூகவலைத்தள பக்கத்தில் பதிவு செய்துள்ளார். அதில் 'கெத்து' என்றால் தந்திரம்' என்று அர்த்தம் என்று கூறப்பட்டுள்ளது.

எனவே உதயநிதி ஸ்டாலின் 'கெத்து' படத்திற்கு வரிவிலக்கு கிடைக்க கண்டிப்பாக நீதிமன்றத்தை அணுகுவார் என்று அவரது நெருங்கிய நட்பு வட்டாரங்கள் தெரிவித்து வருகின்றன.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment