'என்னுயிர் தோழன்' பாபு வீட்டில் மூன்றே வாரத்தில் இன்னொரு சோகம்.. குடும்பத்தினர் அதிர்ச்சி..!

  • IndiaGlitz, [Thursday,October 12 2023]

இயக்குனர் இமயம் பாரதிராஜா இயக்கத்தில் உருவான ’என்னுயிர் தோழன்’ என்ற திரைப்படத்தில் ஹீரோவாக நடித்தவர் பாபு. இந்த படம் மிகப்பெரிய வெற்றி பெற்ற நிலையில் அதன் பிறகு பாபு சுமார் பத்து படங்களில் கமிட்டானதாக கூறப்பட்டது.

இந்த நிலையில் ’மனசார வாழ்த்துங்களேன்’ என்ற படத்தில் அவர் நடித்துக் கொண்டிருந்தபோது சண்டை காட்சியின்போது ஏற்பட்ட விபத்து காரணமாக அவரது முதுகுத்தண்டில் உள்ள எலும்பு உடைந்தது. இதையடுத்து பல ஆண்டுகளாக படுக்கையிலேயே இருந்து சிகிச்சை பெற்று வந்த நிலையில் சமீபத்தில் அவர் காலமானார். அவரது மறைவுக்கு பாரதிராஜா இரங்கல் தெரிவித்து இருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் பாபு இறந்த 3 வாரத்தில் அவரது அம்மாவும் நேற்று இறந்துவிட்டார். பாபுவின் அம்மா பிரேமா, மகன் இறந்ததிலிருந்து சரியாக சாப்பிடாமல் துக்கத்தில் இருந்து வந்ததால் அவரது உடல்நிலை மோசமடைந்து நேற்று அவர் காலமானார்.

’என்னுயிர் தோழன்’ பாபுவின் அம்மா முன்னாள் சட்டமன்ற சபாநாயகர் ராஜாராம் அவர்களின் சகோதரி என்பது குறிப்பிடத்தக்கது. பாபுவின் வீட்டில் பாபு, அதன் பிறகு அவரது அம்மா என அடுத்தடுத்து உயிரிழப்பு ஏற்பட்டது அவரது குடும்பத்தினர்களை பெரும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கி உள்ளது.