டெல்லி கணேஷ் மகன் அறிமுகமாகும் படத்தின் ரிலீஸ் தேதி

  • IndiaGlitz, [Saturday,March 12 2016]

கடந்த 1976ஆம் ஆண்டில் இருந்து கோலிவுட் திரையுலகில் பிரபல குணசித்திர மற்றும் நகைச்சுவை நடிகராக விளங்கி வரும் டெல்லி கணேஷ் சுமார் 400 படங்களுக்கும் மேல் நடித்துள்ளார். இந்நிலையில் அவரது மகன் மஹா ஹீரோவாக அறிமுகமாகும் 'என்னுள் ஆயிரம்' என்ற படத்தை அவர் தயாரித்து வந்தார்.


இந்த படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களாக விறுவிறுப்பாக நடைபெற்ற நிலையில் இந்த படத்தின் ரிலீஸ் தேதி குறித்த தகவல் தற்போது வெளிவந்துள்ளது. இந்த படம் வரும் ஏப்ரல் 1-ஆம் தேதி ரிலீஸ் ஆகவுள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது.

மஹா, மரினா மைக்கேல், வின்சென்ட் அசோகன், உள்பட பலர் நடித்துள்ள இந்த படத்தை கிருஷ்ணகுமார் என்ற அறிமுக இயக்குனர் இயக்கியுள்ளார். இவர் பிரபல இயக்குனர் ஏ.எல்.விஜய்யிடம் உதவியாளராக இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. கோபிசுந்தர் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார்.

More News

2016-ல் விஜய்சேதுபதியின் தசாவதாரம்

கடந்த 2015ஆம் ஆண்டு ஜெயம் ரவி நான்கு படங்களில் நடித்து அந்த ஆண்டின் ஹீரோவாக புகழப்பட்டார்...

கமல்ஹாசனின் அடுத்த பட படப்பிடிப்பு ஆரம்பம்

நடிகர் திலகம் சிவாஜி கணேசன் பேரனும் ராம்குமாரின் மகனுமாகிய துஷ்யந்த் 'ஈஷான் புரடொக்ஷன்ஸ்' என்ற புதிய நிறுவனத்தை தொடங்கி...

விஜய்சேதுபதி, ராதிகாவுக்கு தேசிய விருது. பிரபல இயக்குனர் தகவல்

'தேசிய விருது பெற்ற 'தென்மேற்கு பருவக்காற்று' என்ற படத்தை இயக்கிய இயக்குனர் சீனுராமசாமி தற்போது 'தர்மதுரை' ...

விக்ரம் பிரபுவின் அடுத்த படத்தலைப்பு

'கும்கி' படத்தில் அறிமுகமாகிய விக்ரம் பிரபு அதனை அடுத்து அரிமாநம்பி, சிகரம் தொடு, வெள்ளக்கார துரை, இவன் வேற மாதிரி...

ரஜினிக்கும் விஜய்க்கும் ஒரே வில்லன்

இளையதளபதி விஜய் நடித்த 'தெறி' திரைப்படம் வரும் தமிழ்ப்புத்தாண்டு தினத்தில் பிரமாண்டமாக வெளியாகவுள்ள நிலையில்...