பிச்சைகாரரிடம் கைவரிசையை காட்டிய திருடர்கள்… ரூ.2 லட்சம் கொள்ளை!
Send us your feedback to audioarticles@vaarta.com
தள்ளாத வயதில் வயிற்றுப் பிழைப்புக்காக பிச்சை எடுத்து சேகரித்து வைத்திருந்த ரூ.2 லட்சம் பணத்தை முதியவரிடம் இருந்து 4 இளைஞர்கள் திருடிச்சென்ற சம்பவம் தென்காசி அருகே நடைபெற்று இருக்கிறது.
தென்காசி மாவட்டம் சங்கரன் கோவில் அருகே நொச்சிகுளத்தைச் சேர்ந்தவர் சண்முகையா. இவர் உடல் ஊனம் காரணமாக கடந்த 10 வருடமாக கவனிக்க ஆளின்றி அங்குள்ள கோவில்களில் பிச்சையெடுத்து வாழ்க்கை நடத்தி வருகிறார். தனக்கு கிடைக்கும் பணத்தில் சாப்பிட்டுக் கொண்டு மருத்துவச் செலவுகளைக் கவனித்தும் வரும் சண்முகையாக சிறுக சிறுக தான் சேர்த்து வைத்த பணம் ரூ.2 லட்சத்தை மூட்டையாகக் கட்டி தலையில் வைத்து தூங்குவாரம்.
இந்நிலையில் நேற்று முன்தினம் டீ குடிப்பதற்காக ஒரு கடைக்கு முன்னாள் அந்தப் பையை வைத்துவிட்டு சென்ற நிலையில் திரும்பிவந்து பார்த்தபோது அந்தப் பை காணாமல் போய் இருக்கிறது. இதனால் அதிர்ச்சியை அடைந்த சண்முகையா அழுது புலம்பியதோடு காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார்.
இந்த புகாரை அடுத்து சிசிடிவி காட்சிகளை ஆராய்ந்த போலீசார் சங்கரன் கோவில் பகுதியைச் சேர்ந்த 4 இளைஞர்கள் பணமூட்டையை திருடி சென்றதைக் கண்டுபிடித்து உள்ளனர். மேலும் அவர்கள் கைது செய்யப்பட்டு இருப்பதும் குறிப்பிடத்தக்கது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Nithya Ramesh
Contact at support@indiaglitz.com