என்ஜாய் எஞ்சாமி பாடலுக்கு கிடைத்த சர்வதேச அங்கீகாரம்!

  • IndiaGlitz, [Saturday,June 26 2021]

முதல் முறையாக தமிழில் வெளியான தனிப்பாடல் ஒன்றுக்கு சர்வதேச அங்கீகாரம் கிடைத்துள்ளது. அந்த பாடல் சந்தோஷ் நாராயணன் இசையில் உருவாக்கிய என்ஜாய் எஞ்சாமி என்ற பாடல் என்பது குறிப்பிடத்தக்கது

கடந்த சில வாரங்களுக்கு முன்னர் சந்தோஷ் நாராயணன் தயாரிப்பில் பாடகி தீ மற்றும் தெருக்குரல் அறிவு இணைந்து பாடிய என்ஜாய் எஞ்சாமி பாடல் வெளியாகி உலக அளவில் பிரபலமானது என்பது தெரிந்ததே. இந்த பாடல் யூ டியூபில் 250 மில்லியனுக்கும் அதிகமானோர் பார்த்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது

மேலும் இந்த பாடலின் ரீமிக்ஸ் பாடலை பிரெஞ்ச் ராப் இசைக் கலைஞர் டிஜே சினேக் என்பவர் உருவாக்கியுள்ளார். இந்த நிலையில் சமீபத்தில் உலக இசை தினம் கொண்டாடப்பட்ட நிலையில் டிஜே ஸ்நேக் மற்றும் பாடகி தீ ஆகியோர் இணைந்து என்ஜாய் எஞ்சாமி பாடல் ரீமிக்ஸ் உருவாக்கியுள்ளனர்

இந்த பாடலின் விளம்பரம் அமெரிக்காவிலுள்ள டைம்ஸ் சதுக்கத்தில் புகைப்படத்துடன் வெளியானது. தமிழ் பாடல் ஒன்றின் விளம்பரம் அமெரிக்காவின் டைம்ஸ் சதுக்கத்தில் விளம்பரமாக வெளியானதை அடுத்து இந்த பாடல் முதல் முறையாக சர்வதேச அங்கீகாரம் பெற்ற தமிழ் தனிப்பாடல் என்ற பெருமையை பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இதுகுறித்து பிரென்ச் ராப் இசைக் கலைஞர் டிஜே ஸ்நேக் தனது டுவிட்டரில் பெருமையாக குறிப்பிட்டு உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது

More News

மக்கள் நீதி மய்யத்தில் புதிய அதிகாரிகள்....! பழ. கருப்பையா-விற்கு முக்கிய பொறுப்பு....!

கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யத்தின், கட்சி ஆலோசராக பழ. கருப்பையா அவர்கள் நியமிக்கப்பட்டு உள்ளார். இக்கட்சியின் தலைவராக பதவி வகித்துள்ள கமல் அவர்கள், இனி கட்சியின் பொதுச் செயலாளர் பதவி வகிப்பார்

சிவகார்த்திகேயனின் 'டாக்டர்' ரிலீஸ் குறித்த தகவல்!

சிவகார்த்திகேயன் நடித்த 'டாக்டர்' திரைப்படம் ரிலீசுக்கு தயாராகி ஒரு சில மாதங்கள் ஆன நிலையிலும் கொரோனா வைரஸ் ஊரடங்கு காரணமாக திரையரங்குகள் மூடப்பட்டுள்ளதால் இந்த படம் வெளியாக முடியாத

சதம் அடித்த பெட்ரோல்… மத்திய அரசின் வரிக் கொள்ளை என காங்கிரஸ் மூத்தத் தலைவர் காட்டம்!

தமிழகத்தில் பெரும்பாலான ஊர்களில் தற்போது ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ.100ஐ தாண்டி விட்டது.

12ஆம் வகுப்பு மதிப்பெண் கணக்கிடுவது இப்படித்தான்: முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு!

12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மதிப்பெண் கணக்கு இப்படித்தான் என முதல்வர் ஸ்டாலின் அவர்கள் சற்றுமுன் அறிவித்துள்ளார். முதல்வர் அறிவித்துள்ள 12ஆம் வகுப்பு மதிப்பெண் கணக்கிடும் முறை

வரலாற்று முக்கியத்தும் கொண்ட ஜார்ஜ் பிளாய்ட் கொலை வழக்கின் தீர்ப்பு!

அமெரிக்காவில் இனவெறி தாக்குதலில் சிக்கி உயிரிழந்த ஜார்ஜ் பிளாய்ட் கொலை வழக்கு மீதான தீர்ப்பு இன்று வெளியாகி உள்ளது