'இங்கிலீஷ்காரன்' நடிகை மதுமிதாவை ஞாபகம் இருக்கிறதா? கணவர், குழந்தைகளுடன் க்யூட் புகைப்படங்கள்..!

  • IndiaGlitz, [Tuesday,April 11 2023]

’இங்கிலீஷ்காரன்’ நடிகை மதுமிதாவை ஞாபகம் இருக்கிறதா? கணவர், குழந்தைகளுடன் க்யூட் புகைப்படங்கள்..!

சத்யராஜ் நடித்த ’இங்கிலீஷ்காரன்’ என்ற திரைப்படத்தில் நடித்த நடிகை மதுமிதா கணவர் மற்றும் குழந்தைகளுடன் இருக்கும் புகைப்படம் இணையதளங்களில் வைரல் ஆகி வருகிறது.

நடிகை மதுமிதா அமீர் நடித்த ’யோகி’ சத்யராஜ் நடித்த ’இங்கிலீஷ்காரன்’ ’தூங்கா நகரம்’ ’பிரியாணி’ உள்ளிட்ட சில தமிழ் திரைப்படங்களில் நடித்துள்ளார். மேலும் இவர் தெலுங்கு மலையாளம் கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


‘இங்கிலீஷ்காரன்’ படத்தில் நடித்து கொண்டிருந்த போது அவருடன் நடித்த சிவா பாலாஜி என்பவரை காதலித்து அதன் பின் திருமணம் செய்து கொண்டார் என்பதும் இந்த தம்பதிக்கு இரண்டு மகன்கள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் மதுமிதாவுக்கு ஆயிரக்கணக்கான ஃபாலோயர்கள் உள்ளனர் என்பதும் அவ்வப்போது அவர் தனது குடும்பத்துடன் இருக்கும் புகைப்படங்களை பதிவு செய்து வருகிறார் என்பது தெரிந்ததே. இந்த நிலையில் சமீபத்தில் அவர் தனது கணவர் குழந்தைகளிடம் இருக்கும் புகைப்படத்தை பதிவு செய்துள்ள நிலையில் அந்த புகைப்படங்கள் வைரல் ஆகி வருகின்றன.

நடிகை மதுமிதாவின் கணவர் சிவா கணேஷ் தமிழ், தெலுங்கு திரைப்படங்களில் நடித்துள்ளார். மேலும் பிக்பாஸ் தெலுங்கு சீசன் 1 நிகழ்ச்சியில் கலந்து கொண்டு டைட்டில் வின்னர் பட்டம் வென்றார் என்பதும் குறிப்பிடத்தக்கது.