டெஸ்ட் போட்டி-திடீர் ஓய்வை அறிவித்த மொயின் அலி… என்ன காரணம்?
Send us your feedback to audioarticles@vaarta.com
இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் ஆல்ரவுண்டர், வலது கை ஸ்பின் பந்து வீச்சாளரான மொயின் அலி சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டி போட்டியில் இருந்து ஓய்வு பெறுவதாக அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு வெளியிட்டு உள்ளார். இவர் சென்னை சிஎஸ்கே அணியில் முக்கிய நபராக விளையாடி வருவதும் குறிப்பிடத்தக்கது.
இங்கிலாந்து கிரிக்கெட் அணிக்காக கடந்த 2014 முதல் விளையாடத் துவங்கிய மொயின் அலி இதுவரை 64 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி உள்ளார். இதில் 5 சதம் அதுவும் கடந்த 2016 ஆம் ஆண்டில் மட்டும் ஒரே நேரத்தில் 4 சதத்தை அடித்து பட்டையைக் கிளப்பி இருக்கிறார். மேலும் 14 அரைச்சதம் மற்றும் 2,914 ரன்களையும் குவித்துள்ளார். மேலும் டெஸ்ட் கிரிக்கெட்டில் 195 விக்கெட்டுகளை வீழ்த்தி இருக்கிறார். அதுவும் 5 முறை ஒரே மேட்சில் 5 விக்கெட்டுகளுக்கு மேல் எடுத்த பெருமையும் இவருக்கு உண்டு.
தற்போது ஐபிஎல் 14 ஆவது லீக் போட்டிகளில் விளையாடி வரும் இவர் அடுத்து டி20 மற்றும் ஆஷஸ் தொடரில் விளையாட வேண்டியிருக்கிறது. இந்நிலையில் ஐபிஎல் போட்டிகளுக்காக ஏற்கனவே பயோ பபுள் முறையில் இருந்து வருவதால் கடும் மனஉளைச்சலை சந்தித்து வருவதாகக் கூறப்படுகிறது. மேலும் குடும்பத்தினருடன் நேரத்தை செலவிட முடியாத நிலைமையையும் இவர் சந்தித்து வருகிறார்.
இந்தக் காரணங்களைத் தவிர மொயின் அலி மருத்துவப் பாதுகாப்பு வளையத்திற்குள் தொடர்ந்து இருக்க வேண்டிய நிலைமை ஏற்பட்டு இருக்கிறது. இதனால் டெஸ்ட் மேட்ச்களில் கவனம் செலுத்த முடியாது எனக்கூறி தனது ஓய்வை அறிவித்து இருக்கிறார். இந்த அறிவிப்பை அடுத்து ரசிகர்கள் பலரும் கடும் அதிர்ச்சியை வெளியிட்டு வருகின்றனர்.
மொயின் அலி சாதனைகள்
மேலும் டெஸ்ட் கிரிக்கெட்டில் மொயின் அலியின் சாதனைகளையும் சில ரசிகர்கள் அசைபோட ஆரம்பித்துள்ளனர். ஆரம்பத்தில் டெஸ்ட் கிரிக்கெட்டில் ஜொலித்துவந்த மொயின் அலி கடந்த 2017 ஆம் ஆண்டு தென் ஆப்பிரிக்காவிற்கு எதிரான 4 டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் மொத்தம் 25 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார்.
அடுத்து கடந்த 2018 ஆம் ஆண்டு 2018-19 ஆம் ஆண்டு இலங்கை மற்றும் மேற்கு இந்திய தீவுகளுக்கு எதிரான டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் இங்கிலாந்து சார்பாக விளையாடிய இவர் ஒரே தொடரில் 32 விக்கெட்டுகளை வீழ்த்தி இருந்ததும் குறிப்பிடத்தக்கது. இப்படி டாப் கீரில் சென்றுகொண்டிருந்த மொயின் அலியால் ஒரு கட்டத்தில் டெஸ்ட் கிரிக்கெட்டில் கவனம் செலுத்த முடியாமல் போனது. இதனால் சில போட்டிகளில் வாய்ப்புகளும் மறுக்கப்பட்டது.
இந்நிலையில் மற்றப் போட்டிகளை கவனத்தில் கொண்ட மொயின் அலி சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வுபெறுவதாக அறிவிப்பு வெளியிட்டு உள்ளார். மேலும் ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் தொடர்ந்து விளையாடுவார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Nithya Ramesh
Contact at support@indiaglitz.com
Comments