உயிரைப் பறித்த லாஸா காய்ச்சல்... கொரோனா மாதிரி பாதிப்பை ஏற்படுத்துமா?
Send us your feedback to audioarticles@vaarta.com
வைரஸ் பெருந்தொற்று நோய்களுள் ஒன்றாகக் கருதப்படும் லாஸா காய்ச்சலால் பாதிக்கப்பட்டு இங்கிலாந்தில் முதல் முறையாக ஒருநபர் உயிரிழந்துள்ளார். இதனால் கடும் பரபரப்பு ஏற்பட்டு இருப்பதும் குறிப்பிடத்தக்கது.
மேற்கு ஆப்பிரிக்காவில் இருந்து இங்கிலாந்திற்கு சமீபத்தில் வந்த ஒரு குடும்பத்தினருக்கு லாஸா காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டு இருக்கிறது. இதில் ஒரு நபர் உயிரிழந்த நிலையில் மற்றொரு நபர் லண்டன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருப்பதாகக் கூறப்படுகிறது. மேலும் ஒரு நபர் நோயிலிருந்து முற்றிலும் குணமடைந்து விட்டதாகவும் இங்கிலாந்து சுகாதாரப் பாதுகாப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது.
எலி போன்ற உயிரினங்களிடம் இருந்து மனிதர்களுக்கு பரவும் லாஸா காய்ச்சல் ஆப்பிரிக்க நாடுகள் முழுவதும் ஆண்டுதோறும் பாதிப்பை ஏற்படுத்தி வந்தது. இதனால் ஆயிரக்கணக்கில் மக்கள் கொத்துக் கொத்தாக உயிரிழந்த நிலையில் சமீபகாலமாக இந்தக் காய்ச்சல் பரவாமல் இருந்துவந்தது. மேலும் நைஜீரியா, சைபீரியா மற்றும் கினியா போன்ற நாடுகளில் லாஸா காய்ச்சல் முற்றிலும் ஒழிந்துவிட்டதாகக் கூறப்பட்டது.
ஆனால் தற்போது லாஸா காய்ச்சலால் பாதிக்கப்பட்டு ஒருநபர் இங்கிலாந்தில் உயிரிழந்துள்ளார். மேலும் ஒருவரிடம் இருந்து மற்றவர்களுக்கு பரவும் தன்மைக் கொண்ட இந்தக் காய்ச்சலால் இதுவரை இங்கிலாந்தில் 10 க்கும் மேற்பட்ட மக்கள் மட்டுமே பாதிக்கப்பட்டு உள்ளதாகவும் கூறப்படுகிறது.
லாஸா காய்ச்சல் பெருந்தொற்று வரிசையில் இருந்தாலும் இது பாதிப்பை ஏற்படுத்தும் நபர்களுக்கு 80% அறிகுறியையே ஏற்படுத்துவதில்லை. மேலும் பாதிக்கப்படும் 1% நபர்கள் மட்டுமே இந்த நோயால் உயிரிழக்க நேரிடுகிறது.
மேலும் இது மிகமிக குறைவான வேகத்தில் மட்டுமே பரவுகிறது என்றும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். கடைசியாக 2009 ஆம் ஆண்டு லாஸா காய்ச்சல் பரவிய நிலையில் தற்போது இங்கிலாந்தில் மீண்டும் தலையெடுத்து இருப்பது பலருக்கும் அச்சத்தை ஏற்படுத்தியிருக்கிறது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout