சென்னையில் கறுப்பு பட்டை அணிந்து விளையாடும் இங்கிலாந்து வீரர்கள்… என்ன காரணம்?
Send us your feedback to audioarticles@vaarta.com
இந்தியாவிற்கும் இங்கிலாந்துக்கும் இடையிலான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி தற்போது சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் மும்மரமாக நடைபெற்று வருகிறது. இதில் கலந்து கொண்ட அனைத்து இங்கிலாந்து வீரர்களும் கைகளில் கறுப்பு பட்டை அணிந்து விளையாடி வருகின்றனர். இதற்கு என்ன காரணம் என்பது குறித்த தகவல் தற்போது வெளியாகி இருக்கிறது.
பிரிட்டிஷ் இராணுவத்தின் முன்னாள் கேப்டனும் கொரோனா தொற்றுக்கு எதிரான போராட்டத்தில் முக்கிய பங்கு வகித்தவருமான சர் டாம் மூரின் நினைவாக இங்கிலாந்து வீரர்கள் அனைவரும் கைகளில் கறுப்பு பட்டை அணிந்து உள்ளனர் என்பது தெரிய வந்துள்ளது. கொரோனா தொற்றுக் காரணமாக இந்த வாரம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட முர்ரே தன்னுடைய 100 ஆவது வயதில் உயிரிழந்து இருக்கிறார். அவருக்கு மரியாதை செலுத்தும் விதமாகவே இங்கிலாந்து வீரர்கள் கறுப்பு பட்டை அணிந்து உள்ளனர்.
1920 ஆம் ஆண்டு யார்ஷயரில் உள்ள கிக்லி எனும் இடத்தில் பிறந்த முர்ரே தன்னுடைய 20 வயதில் பிரிட்டிஷ் இராணுவத்தில் சேர்ந்தார். தன்னுடைய சிறந்த சேவையினால் 26 ஆவது வயதிலேயே பிரிட்டிஷ் இராணுவத்திற்கு பயிற்சியாளராகவும் மாறி இருக்கிறார். மூர் இந்தியாவிலும் அதைத் தவிர பர்மாவிலும் சிறிது காலம் இராணுவச் சேவையில் இருந்ததாகக் கூறப்படுகிறது.
அதுமட்டும் இல்லாமல் முர்ரே இரண்டாம் உலகப் போரின்போது வெலிங்கடன் ரெஜிமென்ட் டியூக்கின் 8 ஆவது பட்டாலியனில் பணியாற்றி இருக்கிறார். அவர் 1945 இன் ஆரம்பத்தில் பிரிட்டனுக்குத் திரும்புவதற்கு முன்பாக பர்மாவில் ஒரு ஜப்பானிய இராணுவப் போரிலும் ஈடுபட்டு இருக்கிறார். இப்படி தொடர்ந்து பிரிட்டிஷ்க்கு தன்னுடைய சேவையை ஆற்றிய முர்ரே சமீபத்தில், கொரோனா தடுப்புக்காக 32 மில்லியன் யூரோக்கள் (சுமார் 286 கோடி) நிதி திரட்டி அந்த பணத்தை பிரிட்டன் தேசிய சுகாதார சேவைக்கு ஒப்படைத்து உள்ளார். இந்தச் சேவையைப் பாராட்டி இங்கிலாந்து வீரர்கள் கைகளில் கறுப்பு பட்டை அணிந்து விளையாடி வருகின்றனர்.
We are wearing black armbands in honour of inspirational war veteran and fundraising hero Captain Sir Tom Moore, who died aged 100 earlier this week. pic.twitter.com/IMuXfwHaUp
— England Cricket (@englandcricket) February 5, 2021
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Nithya Ramesh
Contact at support@indiaglitz.com