தனுஷின் 'ரவுடி பேபி' பாடலில் ஒரு விழிப்புணர்வு பாடல்: மருத்துவரின் புதிய முயற்சி

  • IndiaGlitz, [Thursday,April 22 2021]

தனுஷ் சாய்பல்லவி நடித்த ’மாரி 2’ படத்தில் இடம்பெற்ற ’ரவுடி பேபி’ என்ற பாடல் மிகப் பெரிய அளவில் உலகம் முழுவதும் ஹிட் ஆனது என்பதும் யூடியூபில் மிக அதிக பார்வையாளர்களை கொண்ட பாடல்களில் இதுவும் ஒன்று என்பதும் தெரிந்ததே.

இந்த நிலையில் இந்த பாடலின் மெட்டில் ஒரு விழிப்புணர்வு பாடல் தற்போது வெளிவந்துள்ளது. இங்கிலாந்தைச் சேர்ந்த குடும்ப நல மருத்துவர் பாஸ்கர் என்பவர் இந்த பாடலை ’ரவுடி பேபி’ பாடல்போல் பாடி சமூக வலைத்தளத்தில் பதிவு செய்துள்ளார். ரத்த அழுத்தம் பற்றிய விழிப்புணர்வு கொண்ட இந்த பாடல் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

பொதுமக்களிடம் ஒரு நல்ல விஷயம் போய் சேரவேண்டும் என்பதற்காக உலக அளவில் ஹிட்டான ஒரு பாடலை பயன்படுத்தி இந்த பாடலை உருவாக்கிய மருத்துவருக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது. மேலும் இந்த பாடலை தனது ட்விட்டர் பக்கத்தில் காவல்துறை உயரதிகாரி அர்ஜுன் சரவணன் அவர்களும் பகிர்ந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

More News

இன்னா மயிலு, யாரை பார்த்து முறைச்சுகினே: வைரலாகும் சிவகார்த்திகேயன் பாடல்!

பிக்பாஸ் கவின் நடித்துள்ள 'லிப்ட்' என்ற திரைப்படத்தின் சிங்கிள் பாடல் இன்று ரிலீசாக இருப்பதாக ஏற்கனவே கவின் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்து இருந்தார் என்பதை பார்த்தோம்.

தனக்கு வழங்கப்பட்ட பரிசுத் தொகையை தான் காப்பாற்றிய சிறுவனுக்காக வழங்கிய மயூர் ஷெல்கே

சமீபத்தில் மும்பையில் உள்ள வாங்கனி என்ற ரயில் நிலையத்தில் பார்வையற்ற மாற்றுத்திறனாளி தாயுடன் சென்று கொண்டிருந்த சிறுவன் ஒருவன் தவறி தண்டவாளத்தில் விழுந்து விட்டார்.

12-ஆம் வகுப்பிற்கு தொடர் விடுமுறை...! தேர்வு எப்பொழுது...?

12-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு செய்முறைத்தேர்வுகள் நடந்துமுடிந்த நிலையில், தற்போது கொரோனாவால் தொடர்விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. 

மூன்றாவது குழந்தை பெற்றால் சிறை? மீண்டும் சர்ச்சையைக் கிளப்பும் பிரபல பாலிவுட் நடிகை!

இந்தியாவில் கொரோனா நோய்த்தொற்றின் இரண்டாவது அலை தற்போது பீதியை கிளப்பி வருகிறது

விவேக் நினைவாக வித்தியாசமாக மரக்கன்றுகளை நட்ட ரம்யா பாண்டியன்!

பிரபல நகைச்சுவை நடிகர் விவேக் அவர்கள் சமீபத்தில் மாரடைப்பு காரணமாக காலமானார் என்பதும் அவருடைய மறைவு தமிழ் திரையுலகிற்கு மிகப்பெரிய இழப்பு என்பதும் தெரிந்ததே.