தனுஷின் 'ரவுடி பேபி' பாடலில் ஒரு விழிப்புணர்வு பாடல்: மருத்துவரின் புதிய முயற்சி

  • IndiaGlitz, [Thursday,April 22 2021]

தனுஷ் சாய்பல்லவி நடித்த ’மாரி 2’ படத்தில் இடம்பெற்ற ’ரவுடி பேபி’ என்ற பாடல் மிகப் பெரிய அளவில் உலகம் முழுவதும் ஹிட் ஆனது என்பதும் யூடியூபில் மிக அதிக பார்வையாளர்களை கொண்ட பாடல்களில் இதுவும் ஒன்று என்பதும் தெரிந்ததே.

இந்த நிலையில் இந்த பாடலின் மெட்டில் ஒரு விழிப்புணர்வு பாடல் தற்போது வெளிவந்துள்ளது. இங்கிலாந்தைச் சேர்ந்த குடும்ப நல மருத்துவர் பாஸ்கர் என்பவர் இந்த பாடலை ’ரவுடி பேபி’ பாடல்போல் பாடி சமூக வலைத்தளத்தில் பதிவு செய்துள்ளார். ரத்த அழுத்தம் பற்றிய விழிப்புணர்வு கொண்ட இந்த பாடல் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

பொதுமக்களிடம் ஒரு நல்ல விஷயம் போய் சேரவேண்டும் என்பதற்காக உலக அளவில் ஹிட்டான ஒரு பாடலை பயன்படுத்தி இந்த பாடலை உருவாக்கிய மருத்துவருக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது. மேலும் இந்த பாடலை தனது ட்விட்டர் பக்கத்தில் காவல்துறை உயரதிகாரி அர்ஜுன் சரவணன் அவர்களும் பகிர்ந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.