இன்ஸ்டாகிராமில் வீடியோ அனுப்பியதால் ஒரு மணி நேரத்தில் ரூ.59 ஆயிரம் இழந்த மாணவர்!
Send us your feedback to audioarticles@vaarta.com
நண்பருக்கு வீடியோ அனுப்பியதால் ஒரு மணி நேரத்தில் ரூபாய் 59 ஆயிரம் இழந்த இன்ஜினியரிங் கல்லூரி மாணவர் ஒருவரால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது
சென்னை அயனாவரம் பகுதியைச் சேர்ந்த 20 வயது இன்ஜினியரிங் கல்லூரி மாணவர் ஒருவர் இன்ஸ்டகிரம் வலைத்தளத்தை அடிக்கடி பயன்படுத்தி உள்ளார். அவருக்கு சமீபத்தில் நண்பரான ஒருபெண், இருவரும் தங்களுடைய நிர்வாண புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பகிர்ந்து கொள்ளலாம் என்று கூறியுள்ளார்
இதனால் சபலம் அடைந்த அந்த மாணவர் தன்னுடைய நிர்வாண படம் மற்றும் வீடியோவை அனுப்பி உள்ளார். இதையடுத்து அந்த வீடியோவை பெற்றுக்கொண்ட அந்த பெண், இந்த வீடியோவை உனது பெற்றோர் மற்றும் உறவினர்களுக்கு அனுப்பி விடுவேன் என்றும் அதை அனுப்பாமல் இருக்க வேண்டுமானால் ரூபாய் 60 ஆயிரம் பணம் வேண்டும் என்று மிரட்டியுள்ளார்.
தனது நிர்வாண வீடியோ பெற்றோருக்கு சென்றால் சிக்கலாகிவிடும் என்று அதிர்ச்சி அடைந்த அந்த மாணவர் உடனடியாக ஆன்லைன்செயலி மூலம் ரூபாய் 59 ஆயிரம் அனுப்பியுள்ளார். இருப்பினும் மீண்டும் அதே வீடியோவை வைத்து பயமுறுத்த வாய்ப்புள்ளது என்பதால் இதுகுறித்து அவர் சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்துள்ளார். இந்த புகார் குறித்து காவல்துறையினர் விசாரணை செய்து வருகின்றனர்.
மிரட்டப்பட்ட அந்த மாணவரின் பெற்றோர் இருவரும் தனியார் நிறுவனங்களில் உயரிய பொறுப்பில் உள்ளனர் என்பதும், தங்களுடைய மகன் இன்ஸ்டாகிராம் மூலம் மிரட்டி பணம் பறிக்கப்பட்ட சம்பவம் அவர்களுக்கு பெரும் அதிர்ச்சியை கொடுத்துள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com