ஏஐசிடிஇ அறிவித்த குட் நியூஸ்....! இன்ஜினியரிங் மாணவர்கள் ஹேப்பி அண்ணாச்சி...!
Send us your feedback to audioarticles@vaarta.com
தாய்மொழி வழியில் பாடம் கற்கும் முறையையே மனதில் எளிதாகவும் பதியும், புதிய கண்டுபிடிப்புகள், ஆராய்ச்சிகளுக்கு வழிவகுக்கும் என உலக கல்வியாளர்கள் தொடர்ந்து கூறிவருகின்றனர். பொறியியல் மற்றும் மருத்துவம் உள்ளிட்ட படிப்புகள், வளர்ந்த நாடுகளில் அவரவர் தாய்மொழியிலே கற்பித்து தரப்படுகிறது. ரஷ்யா, ஜப்பான், சீனா, பிரான்ஸ் உள்ளிட்ட நாடுகளில் தாய் மொழியில் தான் இன்றளவிலும் பாடங்கள் கற்பிக்கப்பட்டு வருகின்றன.
இந்நிலையில் இந்தியாவில் உள்ள 7 குறிப்பிட்ட மொழிகளில் ஆசிரியர்கள் தங்கள் தாய்மொழியிலே பாடங்களை கற்பிக்கலாம் என அகில இந்திய தொழில்நுட்பக்கழகம் கூறியுள்ளது. அதன்படி தமிழ், பெங்காலி, இந்திய, தெலுங்கு, குஜராத்தி, மராத்தி, கன்னடம், மலையாளம் உள்ளிட்ட 7 மொழிகளில் பாடங்களை கற்பிக்க ஏஐசிடிஇ அனுமதியளித்துள்ளது. இதனால் வரும் கல்வியாண்டு முதல் தமிழகத்தில், தமிழ் மொழியிலே மாணவர்கள் பொறியியல் பாடங்களை கற்றுக்கொள்ளலாம்.
ஏஐசிடிஇ வெளியிட்டதில், முக்கியகுறிப்பு என்னெவெனில் கன்னடம், மலையாளம், தெலுங்கு, தமிழ் உள்ளிட்ட தென் இந்திய மொழிகள் இடம்பெற்றிருப்பதுதான். ஏற்கனவே தமிழ்வழி பொறியியல் படிப்புகள் நடைமுறையில் உள்ளநிலையில், இதன் மூலம் மாணவர்கள் தமிழ்மொழி வழியாக பொறியியல் பாடங்களை கற்றுக்கொள்ளலாம்.
இதனால் மாணவர்கள் பொறியியல் பாடங்களை எளிதாக கற்றுக்கொண்டு, புரிதலுடன் வெளிவர இயலும். அவர்களால் பொறியியல் படிப்பின் தரம் உயரும் எனலாம்.
இதுபற்றி பேசிய ஏஐசிடிஇ சேர்மேன் அணில் சாகஸ்டிராபுத்தே கூறியிருப்பதாவது,
"பொறியியல் பாடங்களை மாநில மொழிகளில் கற்பிக்க வேண்டும் என, இந்தியாவில் இருந்து 500-க்கும் அதிகமான கோரிக்கைகள் வந்த வண்ணம் இருந்தது. இதனால் தான் குறிப்பிட்ட 7 மொழிகளில் பொறியியல் பாடங்களை எடுக்க அனுமதியளித்துள்ளோம். இனி வரும் காலங்களில் இன்னும் 4 மொழிகள் சேர்க்கப்பட்டு, அவை 11 மொழியாக உயர்த்தப்படும். ஆசிரியர்களுக்கு மாநில மொழிகளில் எளிமையாக பாடங்கள் கற்றுத்தர வழிகாட்டுதல்கள் அமைத்து தரப்படும் என்று அவர் கூறியுள்ளார்.
ஏஐசிடிஇ அறிவித்துள்ள இந்த முடிவிற்கு மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. தமிழக மாணவர்கள் மற்றும் மொழியாளர்கள் மகிழ்ச்சியில் உள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aarna Janani
Contact at support@indiaglitz.com