ஆர்யாவின் மனைவி யார்? ஏமாற்றிய எங்க வீட்டு மாப்பிள்ளை
Send us your feedback to audioarticles@vaarta.com
ஆர்யாவை திருமணம் செய்து கொள்ள போகும் பெண் யார் என்ற கேள்விக்கு நேற்றைய 'எங்க வீட்டு மாப்பிள்ளை' நிகழ்ச்சியின் இறுதி போட்டியில் தெரிய வரும் என்று கூறப்பட்டது. ஆனால் எதிர்பார்த்தது போலவே ஆர்யா ஏமாற்றியதால் நெட்டிசன்களின் கலாய்ப்புக்கு ஆளாகியுள்ளார்
பிரபல தொலைக்காட்சியில் ஆர்யா நடத்திய 'எங்க வீட்டு மாப்பிள்ளை' நிகழ்ச்சியில் மொத்தம் 16 இளம்பெண்கள் கலந்து கொண்டனர். இவர்களில் வெற்றி பெறும் பெண்ணை ஆர்யா திருமணம் செய்து கொள்வார் என்றும் கூறப்பட்டது.
இந்த நிலையில் நேற்று இந்த நிகழ்ச்சியின் இறுதிச்சுற்று நடைபெற்றது. இந்த சுற்றுக்கு சுசானா, சீதாலக்ஷ்மி, அகதா ஆகிய பெண்கள் தேர்வு பெற்றிருந்தனர். இந்த மூவரில் ஒருவருக்கு மாலை அணிவித்து மனைவியாக ஆர்யா ஏற்று கொள்வார் என்று எதிர்பார்க்கப்பட்டு இந்த நிகழ்ச்சியை பலரும் பார்த்தனர். ஆனால் பார்வையாளர்களை ஏமாற்றும் வகையில் இறுதி நிகழ்ச்சியில் ஆர்யா கூறியதாவது:
என்னோட வாழ்க்கையை முடிவு செய்றதா அறிவிக்கப்பட்ட இந்த ஷோவுல, இவ்ளோ எபிசோடுகள் டெலிகாஸ்ட் ஆனதுல இருந்து என்னால டிசைட் பண்ண முடியலை. எனக்கு இன்னும் கொஞ்சம் கால அவகாசம் தேவைப்படுது. அதுபோக, இந்த ஷோவுக்கு வந்த எல்லாருமே என்னைப் பிடிச்சு வந்தாங்க. என்னோட மனம் விட்டுப் பேசினாங்க. நானும் அவங்ககிட்ட உண்மையாகவே நடந்துக்கிட்டேன். ஸோ, அவங்க யாரையுமே நான் ஹர்ட் பண்ண விரும்பலை. அதனால, என்னோட மேரேஜ் பத்திக் கொஞ்சம் யோசிச்சு, கூடிய சீக்கிரமே சொல்லிடுறேன்!" என்று கூறினார்.
இந்த முடிவு எதிர்பார்த்த ஒன்றுதான் என்று இந்த நிகழ்ச்சியின் ஆரம்பத்தில் இருந்தே கூறி வந்த நெட்டிசன்கள் தற்போது ஆர்யாவை கலாய்த்து வருகின்றனர்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Contact at support@indiaglitz.com