ஆர்யாவின் மணமகளுக்கு அடித்த அதிர்ஷ்டம்
Send us your feedback to audioarticles@vaarta.com
தனியார் தொலைக்காட்சி ஒன்றில் நடிகர் ஆர்யாவுக்கு பெண் தேடும் நிகழ்ச்சியான 'எங்க வீட்டு மாப்பிள்ளை' என்ற நிகழ்ச்சி ஒளிபரப்பானது என்பது அனைவரும் அறிந்ததே. இந்த நிகழ்ச்சியில் பலகட்டப் பரிசீலனைக்குப் பிறகு 16 இளம்பெண்கள் தேர்வு செய்யப்பட்டு கலந்து கொண்டனர். எதிர்பார்த்தபடியே இவர்களில் யாரையும் மணமகளாக ஆர்யா தேர்வு செய்யப்படவில்லை. இருப்பினும் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பெண்கள் அனைவரும் தமிழகம் முழுவதும் புகழ் பெற்றனர்.
இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட 16 பேர்களில் ஒருவரான அபர்ணதி என்பவருக்கு தற்போது அதிர்ஷ்டம் அடித்துள்ளது. ஆம், பிரபல இயக்குனர் வசந்தபாலன் இயக்கத்தில் ஜிவி பிரகாஷ் நடிக்கவுள்ள திரைப்படத்தில் நடிக்க அபர்ணதி ஒப்பந்தமாகியுள்ளார். இன்று முதல் இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்கவுள்ளதாகவும், இந்த படப்பிடிப்பில் ஜிவி பிரகாஷ், அபர்ணதி உள்பட படக்குழுவினர் அனைவரும் கலந்து கொள்ளவிருப்பதாகவும் செய்திகள் வெளிவந்துள்ளது.
இந்த படத்தில் 'பள்ளி பருவத்திலே' படத்தின் நடித்த நந்தன் ராம் மற்றும் ராதிகா சரத்குமார் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கவுள்ளனர். மேலும் இந்த படத்தில் ஜெனிபர், மணிமேகலை, 'பாகுபலி' பட புகழ் பிரபாகர் உள்பட பலர் நடிக்கவுள்ளனர். ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கும் இந்த படத்துக்கு கணேஷ் சந்திரா ஒளிப்பதிவு செய்கிறார்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Contact at support@indiaglitz.com